AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதலமைச்சருக்கும் படிப்பு முக்கியம்… அபிசேக் பச்சனின் இந்த தஸ்வி படத்தை பார்த்து இருக்கீங்களா?

Abhishek Bachchan's social comedy movie Dasvi OTT Update: இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அபிஷேக் பச்சன். இவர் அரசியல்வாதியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தஸ்வி. இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று இந்த செய்தில் பார்ப்போம்.

முதலமைச்சருக்கும் படிப்பு முக்கியம்… அபிசேக் பச்சனின் இந்த தஸ்வி படத்தை பார்த்து இருக்கீங்களா?
தஸ்விImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Apr 2026 22:10 PM IST

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். பல நூறு படங்களுக்கு மேலாக சூப்பர் ஹிட் கொடுத்த இவரது வாரிசாக பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார் அவரது மகன் அபிஷேக் பச்சன். இந்தி சினிமாவில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் அபிஷேக் பச்சன். பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார் அபிசேக் பச்சன். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எந்த கதாபபத்திரமாக இருந்தாலும் தைரியமாக ஏற்று நடிக்கும் நடிகராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தஸ்வி. சோசியல் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் துஷார் ஜலோட்டா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் உடன் இணைந்து நடிகர்கள் யாமி கௌதம், நிம்ரத் கவுர், மனு ரிஷி சத்தா, அபிமன்யு யாதவ், அருண் குஷ்வா, சித்தரஞ்சன் திரிபாதி, டேனிஷ் உசேன், சுமித் சேகர் ராய், ரோஹித் திவாரி, லோகேஷ் மிட்டல், முபாஷிர் பஷீர் பேய், தன்வீர் சிங், சச்சின் ஷெராஃப், அதிதி வட்ஸ், சிவன்கித் சிங் பரிஹார், சக்தி சிங்,ஷோப்னா யாதவ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

தஸ்வி படத்தின் கதை என்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இந்தப் படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் முதலமைச்சராக நடித்து இருப்பார். 8-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர் இளம் முதலமைச்சராகவும் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும் நபராகவும் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு ஊழல் வழக்கில் அபிஷேக் பச்சனை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் முதலமைச்சர் பதவிக்கு தனக்கு பதிலாக தனது பேச்சை கேட்டும் ஒரு நபர் என்று மனைவி நிம்ரத் கவுரை நியமிக்கிறார்.

Also Read… நடிகர்களின் பின்னால் சென்று இளைஞர்கள் காயமடைந்தால் அது அவர்களுக்குதான் ஆபத்து – நடிகர் ரஜினிகாந்த்

ஆரம்பத்தில் கணவர் சொல்வதை கேட்டு வந்த நிம்ரத் கவுர் பின்பு முதலமைச்சர் என்ற பதவி போதையில் தனது கணவரை ஜெயிலிலேயெ வைத்துவிட்டு தானே ஆட்சியை நடத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இது ஒரு கட்டத்தில் அபிசேக் பச்சனுக்கு தெரிந்துவிட அவர் அதனை எப்படி கையாண்டார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் என இரண்டு ஓடிடி தளங்களிலும் காணக் கிடைக்கின்றது.

Also Read… கர படத்திலிருந்து வெளியானது கண்ணம்மா என் கண்ணம்மா பாடலின் லிரிக்கள் வீடியோ

Follow Us