AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர்களின் பின்னால் சென்று இளைஞர்கள் காயமடைந்தால் அது அவர்களுக்குதான் ஆபத்து – நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth Recent Interview Viral On Social Media : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இளைஞர்களுக்கு பல அட்வைஸ்களை வழங்கினார். அது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நடிகர்களின் பின்னால் சென்று இளைஞர்கள் காயமடைந்தால் அது அவர்களுக்குதான் ஆபத்து – நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Apr 2026 13:24 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்ரது. மேலும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தொடர்ந்து ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைப்பெற்று வருகின்றது. விரைவில் படத்தின் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 173-வது படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் புரோமோ ஷூட் இந்த மாதத்தில் எடுக்கப்பட உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இளைஞர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்:

இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த சந்திப்பில் செய்தியாளர் இன்றைய இளைஞர்கள் நடிகர்களைப் பின்தொடர்ந்து சென்று, தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு மூத்த நடிகராக, அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அது அவர்களுக்கேதான் இழப்பு. அவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி, உடல்நலத்துடன் இருக்க வேண்டும். தயவுசெய்து போதைப்பொருட்கள் அல்லது மதுவுக்கு அடிமையாகிவிடாதீர்கள்; அது உங்கள் குடும்பத்தின் வாழ்க்கையையே நரகமாக்கிவிடும். உங்கள் நண்பர்களில் யாரேனும் இவற்றைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், அவர்களை நெருங்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Mohanlal: ரஜினியின் ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கை முடித்த மோகன்லால்? – வைரலாகும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் பேச்சு:

Also Read… LIK Movie: பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ படத்திலிருந்து ‘பூக்கட்டும்’ லிரிக்கல் பாடல் வெளியீடு!

Follow Us