AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு!

Nooru Saami Movie New Poster: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் நூறு சாமி. இந்தப் படத்தில் இருந்து தற்போது புது போஸ்டர் வெளியாகி உள்ளது.

புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு!
நூறு சாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Apr 2026 12:56 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது இசையில் வெளியான பாடல்கள் பல நூறு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் ஆட்சி செய்துக்கொண்டு இருந்த விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி இசையமைப்பாளராக விஜய் ஆண்டனியை ஏற்றுக்கொண்ட மக்கள் அவரை நாயகனாகவும் கொண்டாடத் தொடங்கினர். தொடர்ந்து பலப் படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி சமீப காலமாக அவரது படங்களை அவரே தயாரித்து வருகிறார். விஜய் ஆண்டனி புரடெக்‌ஷன்ஸ் சார்பாக அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி அந்த நிறுவனத்தை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இறுதியாக நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சக்தி திருமகன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியில் வெளியான போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு:

அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் நூறு சாமி. இயக்குநர் சசி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நூறு சாமி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படம்… தயாரிப்பு நிறுவனத்திற்காக முக்கிய முடிவு எடுத்த நடிகர் விஜய்

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் இசையமைப்பாளர் இவரா?

Follow Us