Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனவரி 17 முதல் பிளிப்கார்ட் குடியரசு தின சேல்.. கொட்டிக் கிடக்கும் சலுகைகள்.. முழு விவரம்!

Flipkart Republic Day Sale | பிளிப்கார்ட் நிறுவனம் தனது 2026 பிளிப்கார்ட் குடியரசு தின சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் ஜனவரி 17, 2026 முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த சேலில் என்ன என்ன சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

ஜனவரி 17 முதல் பிளிப்கார்ட் குடியரசு தின சேல்.. கொட்டிக் கிடக்கும் சலுகைகள்.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Jan 2026 13:46 PM IST

இந்தியாவின் மிக முக்கிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனமான உள்ளது தான் பிளிப்கார்ட் (Flipkart). இ காமர்ஸ் துறையில் ராஜாவாக அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் உள்ள நிலையில், பிளிப்கார்ட் தளத்திற்கு அதிக பயனர்கள் உள்ளனர். இதன் காரணமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிளிக்பார்ட் நிறுவனம் அவ்வப்போது தனது சேலை அறிவிக்கும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு சேலை அறிவிக்கும் பிளிப்கார்ட், குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் 2026 குடியரசு தின சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் எப்போது நடைபெற உள்ளது, இதில் என்ன என்ன சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 குடியரசு தின சேலை அறிவித்த பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த 2026 பிளிப்கார்ட் குடியரசு தின சேல் (2026 Flipkart Republic Day Sale) ஜனவரி 17, 2026 அன்று தொடங்குகிறது. இந்த சேல் ஜனவரி 26, 2026 வரை நடைபெற உள்ளது. இதுவே பிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) அம்சத்தை கொண்டுள்ள நபர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் ஜனவரி 16, 2026 முதலே பிளிப்கார்ட் சேலில் சலுகைகளை பெற முடியும்.

இதையும் படிங்க : Realme Pad 3 : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பேட் 3.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

வங்கி சலுகைகள் மற்றும் ரிவார்டுகள்

இந்த சேலில் பயனர்கள் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி, சிறந்த மாத தவணை முறை ஆகியவற்றை ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

இந்த பிளிப்கார்ட் 2026 குடியரசு தின சேலில் ரெட்மி நோட் 15, போக்கோ எம்8 5ஜி, ஓப்போ ரெனோ 15 சீரீஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர ஜியோமி, மோட்டோரோலா, போக்கோ, விவோ, கூகுள் பிக்சல் உள்ளிட்ட பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க : Redmi Note 15 5G : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி நோட் 15 5ஜி.. அதுவும் பட்ஜெட் விலையில்!

வீட்டு உபயோக பொருட்களுக்கான தள்ளுபடி

பிளிப்கார்ட் நிறுவனம் வீட்டு உபயோக பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்க உள்ளது. ஏசி, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.