Realme Pad 3 : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பேட் 3.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Realme Pad 3 Introduced In India | ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ரியல்மி பேட் 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனம் தான் ரியல்மி (Realme). இந்த நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி பேட் 3 ஸ்மார்ட்போனை (Relame Pad 3 Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ரியல்மி பேட் 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரியல்மி பேட் 3
இந்த ரியல்மி பேட் 3 ஸ்மார்ட்போன் 11.61 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 578 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 550 நிட்ஸ் பிரைட்னஸ் அம்சத்தை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக் SoC பிராசசர் அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ள நிலையில், இது 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக 10 ஜிபி விர்சுவல் ரேம் (Virtual RAM) பெறலாம் என் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி இணைய வசதி இல்லாமல் ஸ்மார்ட்போனில் லைவ் டிவி பார்க்கலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!
விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Designed for smart learning and everyday productivity, the #realmePad3 starts at ₹24,999*
First Sale on 16th Jan, 12 PM
*T&C Apply pic.twitter.com/vMBdIorg6v
— realme (@realmeIndia) January 6, 2026
128 ஜிபி வைஃபை மட்டும் ஆப்ஷன் உடன் கூடிய ரியல்மி பேட் 3 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.26,999 ஆக உள்ளது. இதுவே 128 ஜிபி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.29,999 ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் மாடலின் விலை ரூ.31,999 ஆக உள்ளது.
இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப் மூலம் இலவச சட்ட உதவி பெறலாம். வந்தாச்சு மத்திய அரசின் நியாய சேது சேவை – எப்படி பயன்படுத்துவது?
இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்களுக்கு சில வங்கி கார்டுகளுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 16, 2026 முதல் ரியல்மி இணையதளம், பிளிப்கார்ட் மற்றும் இதர ரியல்மி ஸ்டோர்களில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.