AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?

TVK Vijay : தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் விவாகரத்து தொடர்பான செய்திகள் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதுகுறித்து விஜய் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?
தவெக தலைவர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Mar 2026 18:47 PM IST

சென்னை, மார்ச் 7 : தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் விவாகரத்து தொடர்பான செய்திகள் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதுகுறித்து விஜய் மறைமுகமாக பதிலளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பேசிய விஜய்,  ரீசன்ட்டா  இருக்குற நிறைய பிரச்னைகளோட சில பிரச்னைகள் எல்லாம் ஓடிட்டிருக்கு இல்லையா… நீங்க அதுக்கு போராடி காயப்படுவதை நான் பாக்குறேன். அதப் பார்த்து என் மனம் வலிக்கிறது. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நானும் நீங்களும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளை மட்டும் பாப்போம். அவ்வளவு எல்லாம் Hurt ஆகாதீங்க. அதெல்லாம் வருத்தமெல்லாம் கிடையாது. நல்லதே நடக்கும் என்று பேசினார்.

விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின விழா மார்ச் 7, 2026 அன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் விழாவில் கலந்துகொண்ட விஜய் பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் பெண்கள் குழந்தைகள், முதியோர் நலனில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை கொள்கை. அதற்கென தனி இலாகா அமைக்கப்படும். அது எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்றார். மேலும் 60 வயது வரை உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.2, 500 வழங்கப்படும் என்றும், அன்னப்பூரணி சூப்பர் சில்க்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அவர் அளித்தார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..

விஜய் பேசும் வீடியோ வைரல்

 

இதையும் படிக்க : திருச்சியில் தவெக பிரம்மாண்ட மாநாடு? விஜய்யின் அதிரடி திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்..

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் அதில் தனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தது கடந்த ஒரு வாரகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதுவரை விஜய் எந்த கருத்தையும் வெளியிடாத நிலையில் முதன்முறையாக அது குறித்து  பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us