AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாலிக்கு ஒரு பவுன் தங்கம் முதல் மோதிரம் வரை… தவெகவின் மாஸ் வாக்குறுதி!

TVK Election Manifesto: தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களுக்கு ரூ.2,500 உதவித் தொகை முதல் தாலிக்கு ஒரு பவுன் தங்கம் வரை பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை உலக மகளிர் தின விழாவில் த வெ க தலைவர் விஜய் அறிவித்தார்.

தாலிக்கு ஒரு பவுன் தங்கம் முதல் மோதிரம் வரை… தவெகவின் மாஸ் வாக்குறுதி!
உலக மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 07 Mar 2026 18:10 PM IST

மகாபலிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை ( மார்ச் 7) நடைபெற்றது. இந்த விழாவில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று தவெக  தேர்தல் வாக்குறுதிகளில் முதல் கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். இதில், தேர்தல் வாக்குறுதிகள் வருமாறு:

மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..

  • பெண்கள் குழந்தைகள் முதியோர் நலனில் அக்கறை செலுத்துவதை தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்றாகும். இதற்காக தனி இலாகாக்கள் உருவாக்கப்படும். இது எனது நேரடி கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பில் இருக்கும்.
  • மதிப்புமிகு மகளிர் திட்டம்: தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் 60 வயது வரை உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும். இதில், மாநிலம் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு விதிவிலக்கு. இதன் மூலம் கூடுதல் மகளிர் பயனடைவர்.
  • அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
  • அண்ணன் சீர் திட்டம்: திருமணத்துக்காக பெண்களுக்கு 1 பவுன் தங்கம் மற்றும் தரமான பட்டு சேலை ஆகியவை தாய் வீட்டில் இருந்து அண்ணன் சீராக வழங்கப்படும்.
  • காமராஜர் கல்வி உறுதி திட்டம்: 1-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை கல்வி இடைநிலை தவிப்பதற்காக பொருளாதார ரீதியாக ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் பாதுகாவலருக்கு ஆண்டு தோறும் ரூ.15,000 நிதி உதவி வழங்கப்படும்.
  • வெற்றி பயணம் திட்டம்: அரசு போக்குவரத்து அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும். இதன் மூலம் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம். பேருந்துக்காக காத்திருக்கும் அவசியமும் ஏற்படாது.
  • தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலுநாச்சியார் படை ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இந்த படையில் இருக்கும் பெண்கள் தங்களது உடலில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருப்பர். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் உருவாக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
  • பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்குவதற்காக அஞ்சலையம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
  • பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்காக ஸ்மார்ட் பேனிக் பொத்தான் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் 24 மணி நேரமும் மையப்படுத்தப்பட்ட கட்டளை மையத்துடன் இணைப்பில் இருக்கும். இந்த பட்டன்கள் தனியார் ஆட்டோக்கள் உள்பட அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் பொருத்தப்படும். இதன் மூலம் 5 நிமிடத்தில் பதில் அளிக்கப்படுவதுடன், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
  • தமிழகத்தில் சிசிடிவி கேமராக்கள், வெளிச்சம் இல்லாத பகுதிகள், மின்விளக்குகள் இல்லாத இடங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
  • சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம்: நிலுவையில் உள்ள கடன்களை திருப்பி செலுத்துவதன் மூலமும், பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்குவது மூலமும், சுய உதவி குழுக்களின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும்.
  • சுய உதவி குழுக்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட எம் எஸ் எம் இ-களாக மாறுபவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
  • ரேஷன் கடைகள் பள்ளிகளில் விலையில்லா நாப்கின்கள் விநியோகம் செய்யப்படும்.
  • தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். அதனுடன் பேபி வெல்கம் கிட் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை அறிவித்தார்.

மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மேயர் ஆர்.பிரியா? திமுக தலைமை காட்டிய க்ரீன் சிக்னல்.. போட்டியிடும் தொகுதி இதுதான்?

Follow Us