இனி இந்த 7 பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவையில்லை.. புதிய விதிகள் இவைதான்!
No Need For PAN Card For These 7 Transactions | முன்னதாக சில பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு முக்கியமாக இருந்தது. இந்த நிலையில் தான், சில பரிவர்த்தனைகளுக்கான கால அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 7 பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு தேவையில்லை.
இந்தியாவில் வாழும் இந்திய குடிமக்கள் வைத்திருக்க வேண்டிய சில முக்கிய ஆவணங்கள் உள்ளன. அதாவது ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card), வாக்காளர் அடையாள (Voter ID) அட்டை ஆகியவை முக்கியமானவையாக உள்ளன. இந்த ஆவணங்கள் இல்லை என்றால் பல்வேறு சேவைகளை பெற முடியாத சூழல் ஏற்படும். இந்த நிலையில், பான் கார்டு பயன்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
பான் கார்டின் முக்கியத்துவம் என்ன?
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்க அனுமதி உள்ளது. இதன் காரணமாக ஒருவர் வைத்திருக்கும் அனைத்து வங்கி கணக்குகளையும் கண்காணிக்க பான் கார்டு உள்ளது. இதன் கீழ், ஒருவரின் அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் தெரிந்துக்கொள்ள முடியும். அதன் மூலம் சட்டத்திற்கு புரம்பான பரிவர்த்தனைகள் உள்ளதா, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக தான் பல இடங்களில் பணம் செலுத்தும்போது பான் கார்டு கேட்கப்படுகிறது.
இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் பெயர், பிறந்த தேதி தவறாக உள்ளதா?.. உங்களால் பணத்தை எடுக்க முடியாது!




இனி இந்த 7 பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவையில்லை
- முன்பு ரூ.50,000-க்கு மேல் வங்கியில் பணம் டெபாசிட் செய்தால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- முன்பு ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் பண பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறைக்கு கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- முன்பு சொத்து வாங்குவதற்கு மற்றும் விற்பனை செய்வதற்கு ரூ.10 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனைக்கு பான் கார்டு கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- வெளிநாட்டு பயண செலவுகள் செய்யும்போது ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டை குறிப்பிட வேண்டும் என்ற விதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- புதிய விதிகளின்படி நீங்கள் ரூ.2 லட்சத்தை தாண்டி பரிவர்த்தனை செய்தால் மட்டுமே பான் விதிகளின் கீழ் கண்காணிக்கப்படுவீர்கள்.
- உணவகங்களில் பணம் கொடுத்து உணவு உண்பதற்கான அளவு ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு விலை உயர்வு
மேற்குறிப்பிட்டுள்ள இந்த 7 மாற்றங்கள் தான் பான் கார்டு பயன்பாட்டில் அமலுக்கு வந்துள்ளது.