RAM என்றால் என்ன.. ஸ்மார்ட்போன் வாங்கும்போது RAM எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
How To Choose Perfect RAM for Smartphone | ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ஒவ்வொரு அளவிலான ரேம் வசதியை கொண்டு இருக்கும். இந்த நிலையில், எந்த ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்குவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்மார்ட்போனை (Smartphone) வாங்குவதற்கு முன்னதாக அதன் சிறப்பு அம்சங்களை சோதனை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக அதன் மென்பொருள் அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். காரணம், ஸ்மார்ட்போனின் மென்பொருள்கள் தான் அதன் நீடித்து உழைக்கும் மற்றும் செயலாற்றும் தன்மையை உறுதி செய்யும். அவ்வாறு மென்பொருள்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளதுதான் ரேம். ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு முன்னதாக அதன் ரேமை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ரேம் என்றால் என்ன, எத்தனை ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரேம் என்றால் என்ன, அதன் பயன் என்ன?
ரேண்டம் அக்சஸ் மெமரி (RAM – Random Access Memory) என்பது தான் ரேம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவான கணினி வன்பொருள் ஆகும். கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களில் அடிக்கடி அனுகப்படும் தகவல்களை சேமித்து வைக்க தற்காலிக நினைவகமாக இந்த ரேம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாதங்களிலும் ரேம் வெவ்வேறு வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பை கொண்டு இருக்கும். ஆனால், அனைத்து சாதனங்களிலும் ரேம் ஒரே மாதிரியான செயல்பாட்டை தான் கொண்டு இருக்கும்.
இதையும் படிங்க : யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!
நல்ல ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு ரேம் தேவை?
ஸ்மார்ட்போனுக்கான ரேம் அளவு அதன் செயல்திறன் பொருத்து மாறுபடும். உதாரணமாக சிலர் தங்களது ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த மற்றும் எளிய சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதாவது, குறுஞ்செய்தி அனுப்புதல், அழைப்பு, வீடியோ ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இத்தகையவர்களுக்கு குறைந்த ரேம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களே போதுமானதாக இருக்கும்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!
ஆனால் சிலரோ தங்களது ஸ்மார்ட்போன்களிலேயே எடிட் செய்வது, கேம் விளையாடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அதிக வேலைகளை செய்யும் நபர்களுக்கு அதிக ரேம் உள்ள ஸ்மார்ட்போன்கள் உதவியாக இருக்கும். எனவே உங்களது தேவைக்கு ஏற்ப ரேம் உள்ள ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



