AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

iPhone 15 : வெறும் ரூ.50,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15.. பிளிப்கார்டின் இந்த சலுகை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Apple 15 Smartphone Discount In Flipkart | ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகையை பயன்படுத்தி ஆப்பிள் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.50,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

iPhone 15 : வெறும் ரூ.50,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15.. பிளிப்கார்டின் இந்த சலுகை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Jul 2026 23:48 PM IST

2026 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus), நத்திங் (Nothing), போக்கோ (Poco) மற்றும் ஜியோமி (Xiaomi) ஆகிய நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றின் விலைகளை உயர்த்தியுள்ளது. ஆப்பிள் ஏற்கனவே விலையை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்து அறிமுகம் செய்ய உள்ள தனது ஆப்பிள் ஐபோன் 18 விலையையும்  உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆப்பிள் பயனர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆப்பிள் ஐபோனை வெறும் ரூ.50,000-க்கு வாங்கிக்கொள்ளலாம்

சிப்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு மத்தியில் நீங்கள் வெறும் ரூ.50,000-க்கு ஆப்பிள் ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பழையது தான். ஐபோன் 17 மற்றும் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் இதில் இல்லை தான். ஆனால், இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்த பட்ஜெட் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. விரைவில் வருகிறது ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்.. சிறப்புகள் என்ன என்ன?

ஐபோன் 15-க்கு அசத்தல் சலுகை வழங்கும் பிளிப்கார்ட்

ஐபோன் 15 ஸ்மார்ட்போன் (Apple iPhone 15) இந்தியாவில் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.58,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் அல்லது எஸ்பிஐ கிரெடிட் கார்டு ஆகிய கார்டுகளை பயன்படுத்தி கூடுதலாக ரூ.5,795 பெறலாம்.

இதையும் படிங்க : BMW கார் நிறுவனம் இல்லையா?.. அந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் எதனை தயாரித்தது தெரியுமா?

இதன் மூலம் ரூ.79,900 மதிப்புள்ள இந்த ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.53,105-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us