பெரம்பூர் சூட்கேஸ் மர்டர்.. டவுசர் – சிகப்பு நிற பையால் சிக்கிய கொடூர மனைவி.. கொலையின் பரபரப்பு பின்னணி!
Perambur Railway Station Suitcase Murder: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் மனித உடல் இருந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.
சென்னை மாவட்டம், பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4- ஆவது பிளாட் பார்மில் கடந்த ஜூன் 5- ஆம் தேதி சூட் கேஸ் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் திறந்து பார்த்தபோது தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு கழுத்தில் இருந்து இடுப்பு வரையிலான உடல் பகுதி மட்டும் இருந்தது. இது ஆண் உடல் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில், கொலை செய்யப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொள்வதில் போலீசாருக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் அருகே ஒரு டிரவுசர் மட்டும் கிடந்தது. அதனை வைத்து போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர். அந்த டவுசரில் பார் கோடு இருந்தது. அதன் மூலம் துப்பு துலக்கிய போலீசார் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி கடையில் அந்த டவுசர் வாங்கப்பட்டது தெரியவந்தது.
டிரவுசர் பார்கோடு மூலம் செல்போன் நம்பர்
அதன் பேரில், அந்த கடைக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த டவுசர் வாங்கிய நபர் குறித்த செல்போன் எண் கிடைத்தது. அந்த செல்போன் எண் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் அந்த செல்போனை பயன்படுத்தும் நபர் தேனாம்பேட்டை மற்றும் டி. நகர் பகுதிகளில் சுற்றி தெரிவது தெரியவந்தது. அதிலும், அந்த நபர் எங்கு அதிகமாக செல்கிறார் என்பது குறித்த தகவலையும் போலீசார் திரட்டினர். அதன்படி, தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை பகுதியில் அந்த நபர் அதிகமாக சுற்றி திரிவது தெரியவந்தது.
மேலும் படிக்க: தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு.. அமைச்சரின் அதிரடியே காரணம்?




கொலை செய்யப்பட்டவரின் அடையாளம்
தொடர்ந்து, அந்த நபரின் செல்போனுக்கு போலீசார் பெண் பேசுவது போல தொடர்பு கொண்டு புற்று நோய்க்கு சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது, அந்த நபர் நாம் நேரில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். அதன்படி, மருத்துவமனை வளாகத்துக்கு வந்த அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பெயர் அமீர் அலி என்பது தெரியவந்தது.
மனைவி – கள்ளக்காதலன் அதிரடி கைது
மேலும், இவரது மனைவி ரோகிமா தனது காதலன் அசரப் என்பவரோடு சேர்ந்து அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து ரயில் நிலையத்தில் வீசி சென்றதும் உடல் பாகங்களை தனியார் ஆஸ்பத்திரி பையில் கட்டி கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதன் மூலம் ரோகிமா மற்றும் கள்ளக்காதலன் அசரப் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் படிக்க: பிரபல ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் அதிரடி கைது.. கடலூரில் அதிர்ச்சி!!