சென்னையில் கோர விபத்து.. அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்.. உயர்நீதிமன்ற அதிகாரி உள்பட இருவர் பலி!
Chennai Accident: சென்னை மூலக்கொத்தளம் சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது ரேஷன் அரசி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் சென்னை உயர்நீதின்ற துணை பதிவாளர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் பலத்த காயமடைந்தனர்.
சென்னை பேசின் பிரிட்ஜ் மூலக்கொத்தலம் சிக்னல் அருகே இன்று திங்கள்கிழமை ( ஜூன் 8) ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது, பின்னால் ரேஷன் அரிசி பொருட்களை ஏற்றுக் கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பெண் உள்பட இருவர் பலத்த காயமடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த வாகன ஓட்டிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிகழ்விடத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற துணை பதிவாளர் பலி
மேலும், விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த பெண் உள்பட இருவரை ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் அடையாளம் தெரியவந்தது. இதில், திருவள்ளூர் மாவட்டம், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் ( 56 வயது). சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை பதிவாளராக பணியாற்றி வந்தார்.
மேலும் படிக்க: பிரபல ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் அதிரடி கைது.. கடலூரில் அதிர்ச்சி!!




தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
இதே போல, ஆவடி, பாலமேடு காலனியை சேர்ந்தவர் கௌதம் ( 60 வயது) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் என்பது தெரியவந்தது. இதேபோல, பலத்த காயமடைந்தவர்கள் ஆவடி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி ( 45 வயது). சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
வியாசர்பாடி பகுதியில் சேர்ந்த பாலகிருஷ்ணன் ( வயது 62) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லாரியின் ஓட்டுநரான ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திடீர் விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்
இதில், லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் விபத்தால் பேசின் பிரிட்ஜ் மேம்பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே, போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் படிக்க: மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு.. சிபிசிஐடி-க்கு மாற்றி அதிரடி உத்தரவு!