பெரம்பூரில் சூட்கேஸில் சடலம் – இறந்தவரின் அடையாளம் தெரிந்தது – மனைவி கைது
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் அடையாளம் தெரிய வந்தது. இந்த நிலையில் ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 7 : பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 5, 2026 சூட்கேஸில் தலை இல்லாத ஆண் சடலம் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலையில்லாத காரணத்தால் உயிரிழந்தவர் என யார் என்பதை கண்டறிவதில் தொடர்ந்து காவல்துறையினருக்கு சவால் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தற்போது தமிழகத்தையே உலுக்கியது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தேனாம்பேட்டையைச் சேர்ந்த அமீர் அலி என்பது தெரியவந்தது. ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரது மனைவியையும் அவரது ஆண் நண்பரையும் காவல்துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : நீதிமன்ற வளாகத்திலேயே கொலையா? கோவையில் பிணமாகக் கிடந்த வாலிபர் வழக்கில் அதிரடி திருப்பம்!!




பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாமல் சடலம் கிடப்பதை அறிந்த ரயில்வே போலீஸார் உடனடியாக உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் ரயில்வே போலீஸார் அளித்த தகவலின் பெயரில் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் ஓட்டேரி காவல்துறையினர் மற்றும் உதவி ஆணைய ரமேஷ் பாபு ஆகியோர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் காணாமல் போனவர்களின் விவரங்கள், காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். ரயில் நிலையம் என்பதால் அண்டை மாநிலங்களிலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. மேலும் சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்றும் ரயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் அருகில் உள்ள இடங்களில் சிசிடிவி காட்சிகளை சேகரித்து சூட் கேஸ் கொண்டு வந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க : கோவையில் 21 ஆண்டுகளாக சாதிய தீண்டாமை? அமைச்சரின் உத்தரவால் அரசு பேருந்து சேவை
மேலும் தலையில்லை என்பதால் அவரது டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள காவல்துறையின் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்பதால் இறந்தவர் மயக்க நிலையில் இருந்தபோது இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.