AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேமராவால் சிக்கிய காக்கி.. ஓடும் ரயிலில் அநாகரீகம்.. ஆதாரத்தால் கைதான கோவை தலைமை காவலர்!

Kovai Head Constable Arrested: சென்னை டூ கோவை ரயிலில் பயணித்த சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், ஆர். எஸ். புரம் தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார். முன்னதாக இவர், சஸ்பெண்ட செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேமராவால் சிக்கிய காக்கி.. ஓடும் ரயிலில் அநாகரீகம்.. ஆதாரத்தால் கைதான கோவை தலைமை காவலர்!
பாலியல் தொல்லை அளித்த காவலர் கைது
Sekaran S
Sekaran S | Updated On: 06 Jun 2026 12:03 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறார். இவர் கடந்த 2025- ஆம் ஆண்டு டிசம்பர் 20- ஆம் தேதி சென்னையில் இருந்து ரயிலில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். அவரின் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது, ரயிலானது காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அந்த நபர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அந்த நபரிடம் எச்சரித்துள்ளார். ஆனால், அந்த நபர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை, அந்த மாணவி நமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அருகில் உள்ள பயணிகளிடம் காண்பித்துள்ளார்.

ஆர்.எஸ்.புரம் தலைமைக் காவலர்

இதைத் தொடர்ந்து, ரயில்வே போலீசாருக்கு அந்த மாணவி புகார் அளித்தார். அதன் பேரில், ரயில்வே போலீசார் சம்பவம் நடைபெற்ற பெட்டிக்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் கோயம்புத்தூர் ஆர். எஸ். புரம் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் என்பதும், அவரது பெயர் ஷேக் அப்துல்லா என்பதும் தெரிய வந்தது. இவர், காவல் பணி தொடர்பாக சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் கோவை திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க: மரணக்குழியான மேம்பாலப் பணி? கோவை தண்ணீர் பந்தலில் பெரும் பள்ளத்தில் விழுந்த நபர்!

தலைமைக் காவலர் அதிரடி கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, தலைமை காவலர் ஷேக் அப்துல்லா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து அவர், கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து, தலைமை காவலர் ஷேக் அப்துல்லாவை அரக்கோணம் ரயில்வே போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட காவலர்

அங்கு, காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்தவர்களே இவ்வாறான செயலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!

Follow Us