AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!

Former Aiadmk Minister Joins Tvk: அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். பனையூர் த வெ க தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் இணைந்தனர்.

அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 06 Jun 2026 11:34 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் அரசியல் களம் அடுத்தடுத்து மாறி வருகிறது. இதில், அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த கட்சியை சேர்ந்த பலர் அந்த கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான சுமார் 25 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல, பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், எம். எஸ். எம். ஆனந்தன் ஆகிய 4 பேர் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதே போல, சுமார் 5- க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்

கடம்பூர் ராஜு: கோவில்பட்டி தெற்கு மண்டலம் அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார். 3 தேர்தல்களில் வெற்றி பெற்றவர் ஆவார். எம். எஸ். எம். ஆனந்தன்: திருப்பூர் வடக்கு (மேற்கு மண்டலம்) அதிமுகவில் அமைச்சர் மற்றும் எம்பி ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இதே போல, எம். சி. சம்பத் கடலூர் வடக்கு மண்டலம் அதிமுகவில் முன்னாள் அமைச்சராகும், மாவட்ட செயலர் ஆகிய பதவிகளை வகித்து உள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணன் உடுமலை மேற்கு மண்டலம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் படிக்க: அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்

இதே போல, அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர். இதில், பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, சங்ககிரி சுந்தரராஜ், வீரபாண்டி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், சிவகாசி ராஜவர்மன், ஆற்காடு சீனிவாசன், கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:ராஜ்யசபா இடைத்தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு தாக்கல்!

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

Follow Us