AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்.. பள்ளி மாணவனை மது குடிக்க வைத்து கழுத்தறுத்து கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட இருவருக்கு வலை!

Sivaganga School Student Murdered : சிவகங்கை மாவட்டத்தில் 10- ஆம் வகுப்பு மாணவனுக்கு மது குடிக்க வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த இரு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்.. பள்ளி மாணவனை மது குடிக்க வைத்து கழுத்தறுத்து கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட இருவருக்கு வலை!
மாதிரிப் படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 06 Jun 2026 12:33 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஸ்வின் ( 15 வயது). இவர், அந்தப் பகுதியில் உள்ள திருக்காளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், நேற்று முன்தினம் காலை அஸ்வின் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், அவர் பள்ளிக்கு செல்லாமல் இழந்த மங்கலம் பகுதியை சேர்ந்த அரவிந்த் ( 25 வயது), காரையூரை சேர்ந்த கணேசன் ( 22 வயது) மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அஜய் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் ஊரின் எல்லையில் உள்ள கண்மாய்க்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, இவர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மாணவனை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர்கள்

அப்போது, திடீரென அரவிந்துக்கும், அஸ்வினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இவர்களை அஜய் சமாதானம் செய்ய முயன்றும், கேட்காததால் அஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அரவிந்த் மற்றும் அஸ்வின் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் அடிதடி ஏற்பட்டது. இதில், கடுமையாக ஆத்திரமடைந்த அரவிந்த் மற்றும் கணேஷ் ஆகியோர் அஸ்வினை பலமாக தாக்கி தான் வைத்திருந்த கத்தியால் கொடூரமான முறையில் தீ கொலை செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்து இருவரும் தப்பி சென்று விட்டனர்.

மேலும் படிக்க: கே.என்.நேரு மீதான ஊழல் புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு திடீர் தடை.. நீதிமன்றம் உத்தரவு!

போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

சிறிது நேரம் கழித்து அஜய் திரும்பி வந்து பார்த்தபோது, அஸ்வின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அஜய் தகவல் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது குடிக்க வைத்து கொலை

தற்போது, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மாணவன் அஸ்வினுக்கு மது அளித்து குடிக்க வைத்து கொலை செய்திருக்கலாம் என தெரிவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அரவிந்த் மற்றும் கணேசன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்து விசாரிக்கும் பட்சத்தில், கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கல்யாண கனவு கலைந்தது.. காதலியுடன் மோதல்.. திருவள்ளூரில் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!

Follow Us