AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரம்பூரில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி – தவெக திட்டம் இதுதான்

Vijay Campaign Permission Granted: பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய  தொகுதிகளில் பரப்புரை செய்ய தமிழக வெற்றிக் கழக  தலைவர் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய்,  பின் பெரம்பூர் தொகுதியில் பரப்புரையை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பெரம்பூரில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி – தவெக திட்டம் இதுதான்
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Mar 2026 18:44 PM IST

வருகிற மார்ச் 30, 2026 அன்று  பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய  தொகுதிகளில் பரப்புரை செய்ய தமிழக வெற்றிக் கழக  தலைவர் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து  மார்ச் 30, 2026 அன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய்,  பின் பெரம்பூர் தொகுதியில் பரப்புரையை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி

அந்த வகையில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கவிருக்கும் தவெக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் பெரம்பூர் தொகுதியில் இருந்து தேர்தல் பரப்புரையை துவங்க திட்டமிட்டருந்தார். இந்த நிலையில் இதற்காக தவெக தரப்பில் இருந்து பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

இதையும் படிக்க : கோவில்பட்டி தொகுதியை கைப்பற்ற இலக்கு… திமுகவில் எழும் கழக குரல்… யார் வசம் செல்கிறது!

அந்த பகுத மிகவும் சிறிய பகுதி என்றும் அங்கு 3000 பேர் பங்கேற்க முடியாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே தவெக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், மார்ச் 28, 2026 அன்று தலைமை செயலகம் வந்த விஜய், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் அளிக்க வந்தார். மேலும் பரப்புரைக்கு உரிய அனுமதி வழங்கக்கோரியும் மனு அளித்தார். மேலும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : “நாட்டுல கொடுமைய பாருங்க”.. விஜய் குறித்து இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!

இதற்கிடையில் சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் மார்ச் 29, 2026 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தவெக வேட்பாளர்களை விஜய் அறிவிக்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 500 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் எனவும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள் அரங்கில் நடைபெறுவதாகவும் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Follow Us