AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நாட்டுல கொடுமைய பாருங்க”.. விஜய் குறித்து இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!

Tamilnadu assembly election: மக்கள் பிரச்சினையை எக்காலத்திலும் பேச வேண்டும் என்பது கட்சிகளின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால், திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் மக்களுடைய பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை. அதனால் அந்த கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று கூறினார்.

“நாட்டுல கொடுமைய பாருங்க”.. விஜய் குறித்து இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Mar 2026 10:37 AM IST

Tamilnadu polls 2026: தவெக தலைவர் விஜய் குறித்து தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார். சென்னை ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவேனில் சென்றபடி அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, சாலையின் இருபுறமும் பொதுமக்கள் அணிவகுத்து நின்று எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது அவர் பேசியதாவது, இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இங்கே கூடியிருக்கும் மக்களே சாட்சி. மயிலாப்பூரில் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். அப்போது நான் பேசியதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அவர் அதிர்ச்சி அடைந்து விட்டார் என்றார்.

இதையும் படிக்க: திமுக கூட்டணி தொகுதி பட்டியல் வெளியாவதில் தாமதம்.. காங்., தேமுதிக விருப்ப இடங்களை கேட்டு பிடிவாதம்!!

4 நாட்களில் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டோம்:

அதன் காரணமாக தான் தனது பேச்சுக்கு 3 அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனது கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து 25 நாட்களாக தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகிறார். இன்னும் முடிவு எட்டவில்லை. நாங்கள் 4 நாட்கள் மட்டும் பேசி தொகுதிகளை முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் புலம்பிக் கொண்டு இருக்கின்றன. ஒரு கட்சியின் மூத்த தலைவர், திமுக தலைமையுடன் பேசிவிட்டு வந்து, ‘அழுது கொண்டே பிரிகிறோம்’ என்று கூறுகிறார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ‘எங்கள் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி’ என்று பெருமை பேசுகிறார்.

புதிதாக சேர்ந்த கட்சிக்கு அதிக இடங்கள்:

தமிழ்நாட்டில் நடைபெற்ற பாலியல், கொலை, கொள்ளை பற்றி திமுக கூட்டணி கட்சிகள் பேசவே இல்லை. வாயை திறக்காமல் மவுனம் காத்தார்கள், திமுக ஆட்சிக்கு துணையாக நின்றார்கள். அவர்களுக்கு தொகுதியை குறைத்து கொடுத்துள்ளார்கள். ஆனால் அண்மையில் திமுகவுடன் போய் சேர்ந்த கட்சிக்கு (தேமுதிக) அதிக இடம் கொடுத்துள்ளார்கள். ஆனால், அதிமுக அப்படி இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்போம், முடிந்துவிட்டால் அந்தந்த கட்சி அவரவர்களின் கொள்கையில் மக்கள் பிரச்சினையை முன் வைப்பார்கள். அது எங்கள் கூட்டணி தர்மம்.

மக்கள் செல்வாக்கு இல்லை:

மக்கள் பிரச்சினையை எக்காலத்திலும் பேச வேண்டும் என்பது கட்சிகளின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால், திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் மக்களுடைய பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை. அதனால் அந்த கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

விஜய் குறித்து விமர்சனம்:

இன்னொரு கட்சி இருக்கிறது. யாராவது இறந்துபோனார்கள் என்றால் அங்கு போய் தான் நாமெல்லாம் துக்கம் விசாரிப்போம். நாட்டில் கொடுமையை பாருங்கள். எதற்காக இறந்தார்கள், ஏன் இறந்தார்கள். அவர்களை இங்கு (பனையூர்) வரழைத்து அனுதாபம் செல்கிறார்கள் என்று விஜய் பெயரையும், அவரது கட்சி பெயரையும் குறிப்பிடாமல், மறைமுகமாக அவர் விமர்சித்தார்.

இதையும் படிக்க: தவெகவுடன் புதிய தமிழகம் கூட்டணி?.. “12 தொகுதிகளில் வெற்றி உறுதி”.. கிருஷ்ணசாமி அதிரடி!!

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி:

திமுக ஆட்சியில் விலைவாசி அதிகரித்து விட்டது. திமுக என்றால் கருணாநிதி குடும்பம் என ஆகிவிட்டது. கொரோனா காலத்தில் கூட சிறப்பாக ஆட்சி செய்தோம். மக்கள் இந்த தேர்தலில் நல்ல வாய்ப்பை தருவீர்கள் என்று நம்புகிறோம், அவ்வாறு வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஆட்சி கொடுப்போம். இது வாரிசு அரசியல், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். சுதந்திரமாக மக்கள் செயல்படும் ஆட்சி வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us