AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல்.. விஜய் ஆவேசம்..

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு நாளை மறுநாள் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். குறிப்பாக, சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல்.. விஜய் ஆவேசம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 27 Mar 2026 19:53 PM IST

சென்னை, மார்ச் 27, 2026: மார்ச் 28ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூரில் தனது பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில், காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் எம்.கே.பி. நகர் பேருந்து நிறுத்தம் அருகே காலை 10 மணிக்கு பரப்புரை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அந்த இடத்தில் 3000 பேர் கூட முடியாது என காவல்துறையினர் தெரிவித்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் இது” என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் தவெக:

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு நாளை மறுநாள் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். குறிப்பாக, சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இந்த சூழலில் பெரம்பூர் தொகுதியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த பிரச்சாரத்திற்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட பாசிசத் தாக்குதல்:

இதுகுறித்து விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகர காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே (26.03.2026), தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. மீதமுள்ள 12 தொகுதிகள் எப்போது வெளியாகும்?

ஆனால், நமது தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு, சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் நடவடிக்கைகள் எங்கிருந்து வந்தன?

இந்த நிலையில், அங்கு காவல்துறை ஆய்வு செய்து 3000 பேர் கூட முடியாது என்று தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அந்த இடம் பிரசாரத்திற்கு உகந்ததல்ல என கூறி அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் செயல் வெட்கக்கேடானது:

இவ்வாறு அதிகாரிகள் சிலரின் துணையுடன் திமுக அரசு செயல்படுவது வெட்கக்கேடானது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சிக்கும் போதெல்லாம், திமுக அரசு பல்வேறு காரணங்களை கூறி அனுமதியை தாமதிப்பதும் அல்லது மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு நசைக்கும் இந்தச் செயல், அதிகாரிகள் ஆளுங்கட்சியின் ஏவலர்களாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும், ‘எங்களுக்கு எதிராக யார் வந்தாலும் அதிகார பலத்தால் அடக்குவோம்’ என்ற எண்ணம் அப்பட்டமான அடக்குமுறையாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோத திமுக ஆட்சியை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Follow Us