AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. மீதமுள்ள 12 தொகுதிகள் எப்போது வெளியாகும்?

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். தென்காசி மற்றும் விருதாச்சலம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. மீதமுள்ள 12 தொகுதிகள் எப்போது வெளியாகும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Mar 2026 15:50 PM IST

சென்னை, மார்ச் 27, 2026: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 28 தொகுதிகள் எவை என்பது குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், தற்போது வரை 16 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 இடங்கள்:

இந்த கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பல நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் அது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் எந்த தொகுதியில் போட்டி?

16 தொகுதிகளின் விவரம்:

இந்த 28 தொகுதிகள் குறித்து பல கட்டங்களாக ஆலோசனை நடைபெற்ற நிலையில், தற்போது வரை 16 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: பொன்னேரி (தனி), வேளச்சேரி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஈரோடு கிழக்கு, உதகை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், வளவன்கோடு, கிளியூர் ஆகிய தொகுதிகள் ஆகும்.

கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட்டது:

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். தென்காசி மற்றும் விருதாச்சலம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… யார் யார் எந்த தொகுதியில் போட்டி!

இந்த நிலையில், 16 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 12 தொகுதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்று மாலை 6 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us