AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்.. மக்கள் உற்சாக வரவேற்பு..

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் இன்று திறந்து வைத்தார். பின்னர், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகள் முறையாக வழங்கப்படுகிறதா, மேலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்.. மக்கள் உற்சாக வரவேற்பு..
எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 13 Jul 2026 17:05 PM IST

ஜூலை 13, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பொதுமக்களுக்குத் தேவையான சேவைகள் முறையாக வழங்கப்படுகிறதா, மேலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய்:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

தேர்தல் முடிந்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு அவர் வரவில்லை என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர்:


பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில், இ-சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். பின்னர், அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இ-சேவை மையத்தையும் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் படிக்க: நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!

அதனைத் தொடர்ந்து, பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். மேலும், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்த பொதுமக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

பெரம்பூரில் கூடிய மக்கள்:

முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பாதுகாப்புப் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு (ரேஷன் கடை) சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிய குடும்ப அட்டைகளை (ரேஷன் கார்டுகள்) பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்காக பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. “மக்கள் சேவை தளம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை நேரடியாக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்கக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us