AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

18 பேரை காவு வாங்கிய திருவள்ளூர் கொடூர ஆலை.. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி ஆக்ஷன்!

Thiruvallur Ammonia Gas Leaking Plant Sealed : திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிந்து 18 உயிரை காவு வாங்கிய கடல் உணவு ஏற்றுமதி ஆலைக்கு மாவட்ட நி்ரவாகம் உத்தரவின்பேரில், வருவாய் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

18 பேரை காவு வாங்கிய திருவள்ளூர் கொடூர ஆலை.. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி ஆக்ஷன்!
திருவள்ளூரில் ஆலைக்கு சீல் வைப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 13 Jul 2026 15:57 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில், சம்பவத்தன்று திடீரென அமோனியா வாயு கசிய தொடங்கியது. இதில், ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் உடல் பாதிப்புக்கு உள்ளாகினர். இதில், 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த ஆலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அலுவலகம், குடோன், குடியிருப்பு, தளவட அறை உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் இன்று திங்கள் கிழமை ( ஜூலை 13) சீல் வைத்தனர். இதேபோல தொழிற்சாலை கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்றது.

இறால் ஏற்றுமதி ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தொழிற்சாலையின் பிரதான நுழைவு வாயில் அதிகாரப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டது. திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து, கடல் உணவு பொருள் ஏற்றுமதி ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் துண்டித்தனர். கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் 21- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலையின் வளாகத்தில் இருந்த ஒரு தொட்டியில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிய தொடங்கியது.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதி கைது!

அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள்

இந்த வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் பலர் மயங்கி விழுந்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து சுமார் 18 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், உயிரிழந்தவர்களில் அனைவரும் பெண்களே ஆவர். பல சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர். இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலையின் தொட்டியில் மீதமுள்ள சுமார் 2 டன் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி 4 நாட்களாக நடைபெற்றது.

அமோனியா வாயு அகற்றும் பணி

இதற்காக அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் கவச உடைகள் அணிந்து அமோனிய வாயுவை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது, இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: அசுரன் கதாசிரியர் பூமணி காலமானார்.. அவருக்கு வயது 79!

Follow Us