AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவில்பட்டி தொகுதியை கைப்பற்ற இலக்கு… திமுகவில் எழும் கழக குரல்… யார் வசம் செல்கிறது!

Kovilpatti constituency: கோவில்பட்டி தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் தன் வசமே வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது எனவும் அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், அந்த தொகுதி யார் வசம் செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவில்பட்டி தொகுதியை கைப்பற்ற இலக்கு… திமுகவில் எழும் கழக குரல்… யார் வசம் செல்கிறது!
கோவில்பட்டி யார் வசம் செல்லும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 28 Mar 2026 10:47 AM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ளன. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த அறிவிப்பை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட உள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல், திமுக வேட்பாளரை நேரடியாக களமிறக்க வேண்டும் என்ற குரல் திமுக வட்டாரத்தில் ஒலித்து வருகிறது. அதன்படி திமுக சார்பில் நடைபெற்ற ஒவ்வொரு கட்சி கூட்டத்திலும் திமுக பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., வடக்கு மாவட்ட செயலாளர் பி. கீதா ஜீவன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி தொகுதியில் வெற்றி வாய்ப்பு

இதனிடையே, கடந்த ஆண்டு கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, வரும் சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்கும் என்று தெரிவித்திருந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கழுகுமலை சுப்பிரமணியன் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். அந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி தனியாக போட்டியிட்ட நிலையில், மதிமுக வேட்பாளர் ரமேஷ் 28,512 வாக்குகள் பெற்றிருந்தார்.

மேலும் படிக்க: “நாட்டுல கொடுமைய பாருங்க”.. விஜய் குறித்து இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர்

இந்த நிலையில், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு 24 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், வேட்பாளர் நேர்காணலில் 23 பேர் பங்கேற்றிருந்தனர். கோவில்பட்டி தொகுதியில் தேவர், நாயக்கர் பட்டியல் இனத்தவர்கள், வேளாளர், நாடார் சமுதாயங்களை சேர்ந்த மக்கள் கணிசமாக உள்ளனர். இதர சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பரவலாக உள்ளனர். இந்த நிலையில், தேவர் சமுதாயத்தை சேர்ந்த 8 பேர் திமுகவில் விருப்ப மனு அளித்துள்ளனர்.

கோவில்பட்டி தொகுதியில் களமிறங்கிய திமுகவினர்

இதில், ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அந்த தொகுதியில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல், திமுகவை நேரடியாக களம் இறங்க வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு அடித்தளமாக கோவில்பட்டி தொகுதியில் திமுக மகளிர் ஸ்டாலின் படையினர் மற்றும் திமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்த தொகுதியை திமுக தன்வசம் வைத்துக்க கொள்ளப்போகிறதா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க போகிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

மேலும் படிக்க: தவெகவுடன் புதிய தமிழகம் கூட்டணி?.. “12 தொகுதிகளில் வெற்றி உறுதி”.. கிருஷ்ணசாமி அதிரடி!!

Follow Us