AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாள்கள் தெரியுமா!

School Summer Vacation: தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17- ஆம் தேதி முதல் 48 நாள்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஜூன் 4- ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாள்கள் தெரியுமா!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Mar 2026 07:48 AM IST

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. தற்போது. 10- ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள், ஏப்ரல் 6- ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி, 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6- ஆம் தேதி முதல் ஏப்ரல் 16- ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதே போல, 6- ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து, 1-ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட உள்ளது.

ஜூன் 4- ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு

இதை தொடர்ந்து, விடுமுறை முடிந்து ஜூன் 4- ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. ஒரு வேளை ஜூன் மாதமும் கோடை வெயிலின் தாக்கம் காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு தேதி சற்று தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளை விரைந்து நடத்தி விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது..

சட்டமன்ற தேர்தல் காரணமாக. . .

பள்ளி மற்றும் கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, தமிழக முழுவதும் தேர்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம். இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கு சுமார் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம் ஆகும்.

கோடை விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு

அத்துடன், மே மாத கோடை வெயிலின் தாக்கம் ஜூன் மாத தொடக்கத்திலும் தொடரும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை சுமார் ஒரு வாரம் வரை நீட்டிக்கப்படும். இந்த நிலையில், நிகழாண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால் பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வுகளஅ விரைந்து முடிக்கப்பட்டு முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று மழை கொட்டும்.. வெயிலும் வதைக்கும்.. இன்றைய வானிலை அப்டேட்..

Follow Us