இனி சிலிண்டர் தேவையில்லை.. குழாய் வழி எரிவாயு இணைப்பு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Piped Natural Gas: தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் தொழில் துறை தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இஸ்ரேல்- ஈரான் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிகம் மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் ஒதுக்கீட்டை 20 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்திருந்தது. அதில் ஏற்பட்ட சில நெருக்கடி காரணமாக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், சிலிண்டர்கள் ஒதுக்கிட்டை பெறுவதற்கு அனைத்து வணிகம் மற்றும் தொழில் துறை, சிலிண்டர்கள் பயன்படுத்தும் நுகர்வோர்கள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பை பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதில், இயற்கை எரிவாயு இணைப்புகளை பெற விரும்பும் வணிகர்கள் மற்றும் தொழில் துறையினர், பொதுமக்கள் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.
நகர எரிவாயு விநியோக நிறுவன அதிகாரி
இதில், ஏற்படும் சந்தேகங்களுக்கு நகர எரிவாயு விநியோக நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரை 63574- 69742 என்ற செல்போன எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம். அதன்படி, திருவள்ளூர், சென்னை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் டோரண்ட் கேஸ் விநியோக நிறுவனத்தை 180021256789 தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம். மேலும், ராமநாதபுரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தோர் ஏ. ஜி. அண்டு பி. திங் கேஸ் விநியோக நிறுவனத்தை 18002022999 தொடர்பு கொள்ளலாம். இதேபோல, திருவாரூர், திருப்பூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தோர் அதானி டோட்டல் கேஸ் விநியோக நிறுவனத்தை 07947545252 என்ற கட்டமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்




சேலம், மதுரை மாவட்ட மக்கள்
சேலம், மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, தென்காசி, சேலம், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தோர் இந்தியன் ஆயில் விநியோக நிறுவனத்தை 1800 180 7788 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மெகா இன்ஜினியரிங் விநியோக நிறுவனத்தை 1800 123 1803 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஐ. ஆர். எம். எனர்ஜி விநியோக நிறுவனத்தை 180891310 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு
இதே போல, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை 1800 224344 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நிறுவனங்கள் குழாய் வழியாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் இயற்கை எரிவாயு நிலையங்கள் மூலமாக சிஎன்சி எரிவாய் விநியோகமும் செய்து வருவதாக தமிழக அரசின் தொழில் துறை செயலர் அருண்ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: குழாயில் வரும் கேஸ்.. எல்பிஜிக்கு மாற்றாகும் பிஎன்ஜி.. எப்படி கிடைக்கும்? அரசு சொல்வது என்ன?