AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று மழை கொட்டும்.. வெயிலும் வதைக்கும்.. இன்றைய வானிலை அப்டேட்..

Weather Update: இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மார்ச் 29 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று மழை கொட்டும்.. வெயிலும் வதைக்கும்.. இன்றைய வானிலை அப்டேட்..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Mar 2026 06:34 AM IST

Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று (மார்ச் 28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், ஏனைய பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது சற்று ஆறுதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. மீதமுள்ள 12 தொகுதிகள் எப்போது வெளியாகும்?

இன்றும், வரும் நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்றும் (மார்ச் 28), நாளையும் (மார்ச் 29) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனக் கூறியுள்ளது.

தொடர்ந்து, மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஏப்.1ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்.2ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என முன்னறிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

இன்று (மார்ச் 28) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மார்ச் 29 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

இன்று (மார்ச் 28) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 3-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மார்ச் 29 மற்றும் மார்ச் 30 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மார்ச் 31 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

இதையும் படிக்க: அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் எந்த தொகுதியில் போட்டி?

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us