AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது..

அந்த புகாரில், “எனக்கு பாடம் நடத்தி வரும் பேராசிரியர் கடந்த மூன்று ஆண்டுகளாக நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை தொந்தரவு செய்து வருகிறார். மனதளவில் துன்புறுத்துகிறார். என் குடும்ப நிலையை அறிந்து கொண்டு உதவி செய்ய முன்வந்த அவர், இன்டர்ன்ஷிப் போன்ற கல்வி உதவிகளை வழங்கினார். பின்னர் ‘தந்தை போன்றவர்’ என நம்பிக்கை அளித்து, தவறான முறையில் அணுக ஆரம்பித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Mar 2026 19:01 PM IST

சென்னை, மார்ச் 27, 2026: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. அங்கு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பேராசிரியர் ஞானவேல் பாபு பாலியல் தொல்லை அளித்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நெல்லையில் இருந்த ஞானவேல் பாபுவை கைது செய்து சென்னைக்கு கொண்டு வருகின்றனர். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க: திருப்பூர்: கேஸ் சிலிண்டர் இல்லாததால் விண்ணுக்கு சென்ற விறகு விலை..!

மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை:

அந்த சம்பவத்தின் பின்னர் மீண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. இந்த முறை, பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் பேராசிரியர் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “எனக்கு பாடம் நடத்தி வரும் பேராசிரியர் கடந்த மூன்று ஆண்டுகளாக நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை தொந்தரவு செய்து வருகிறார். மனதளவில் துன்புறுத்துகிறார். என் குடும்ப நிலையை அறிந்து கொண்டு உதவி செய்ய முன்வந்த அவர், இன்டர்ன்ஷிப் போன்ற கல்வி உதவிகளை வழங்கினார். பின்னர் ‘தந்தை போன்றவர்’ என நம்பிக்கை அளித்து, தவறான முறையில் அணுக ஆரம்பித்தார்.

மேலும் படிக்க: சென்னை: சில நிமிட நடைப்பயிற்சி… திடீரென உயிரிழந்த பள்ளி மாணவி…

பெண்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பகிருமாறு வற்புறுத்தினார். நான் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை தடை செய்த பிறகும், மிரட்டி பேசுமாறு வலியுறுத்தினார். என் நண்பர்களை தொடர்பு கொண்டு என்னை பேசச் சொல்லியும் தொல்லை கொடுத்தார். என்னை மட்டும் அல்லாமல், மேலும் சில மாணவிகளுக்கும் இதேபோல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பேராசிரியர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு:

இந்த புகாரைத் தொடர்ந்து, பேராசிரியர் ஞானவேல் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர்மீது துறை ரீதியான விசாரணைக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கோட்டூர்புரம் போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தனிப்படை போலீசார் நெல்லையில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீதான இந்த பாலியல் புகார், கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us