AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடத்தில் திடீரென பள்ளம் வந்தது எப்படி? விஜய் பரபரப்பு கேள்வி

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் மார்ச் 28, 2026 அன்று மேற்கொள்ளவிருந்த பரப்புரைக்கு  காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது.  பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே காலை 10 மணிக்கு பரப்புரைக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடத்தில் திடீரென பள்ளம் வந்தது எப்படி? விஜய் பரபரப்பு கேள்வி
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Mar 2026 18:43 PM IST

சென்னை, மார்ச் 27 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூரில் மார்ச் 28, 2026 அன்று மேற்கொள்ளவிருந்த பரப்புரைக்கு  காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது.  பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே காலை 10 மணிக்கு பரப்புரைக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், அந்த இடத்தில் 3,000 பேர் கூட முடியாது என காவல்துறையினர் கூறியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து அறிவித்தபடி விஜய் பரப்புரை மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் அரசியல் பின்னணி உள்ளதாக அக்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன. அந்த வகையில் இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் நிலையில் இதுவரை வேட்பாளர்களை வெளியிடவில்லை. இந்த நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் விஜய் பெரம்பூரில் இருந்து தனது பரப்புரையை தொடங்குவார் என்றும் கூறப்பட்டது.

விஜய் வெளியிட்ட அறிக்கை

 

இதையும் படிக்க : யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!

அந்த வகையில் மார்ச் 28, 2026 அன்று நாளை விஜய் பரப்புரை மேற்கொள்வார் என்றும் ஒரே நாளில் 5 தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரம்பூரில் போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில் தனது பரப்புரையை பெரம்பூரில் இருந்து விஜய் துவங்கவிருந்தார். இதற்காக பெரம்பூரில் எம்கேபி நகர் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தது. காவல்துறை அனுமதியை பொறுத்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்ட எம்கேநகர் பகுதியில் 3,000 பேர் கூட முடியாது எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. இதனையடுத்து தேர்தல் ஆணையமும் அந்த பகுதியில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பரப்புரைக்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : Poonamalle Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே தவெக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தவெகவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெகவிற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

 

Follow Us