AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!

Tamil Nadu Assembly Election: தொடர்ந்து, 2வது கட்டமாக நேற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தந்த கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியலில் கையெழுத்திட்டனர்.

யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Mar 2026 07:52 AM IST

Tamilnadu Polls 2026: சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் இன்று வெளியாகிறது. சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ்-28, தேமுதிக-10, விடுதலைச் சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-5, இந்திய கம்யூனிஸ்ட்-5, மதிமுக-4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, நேற்றை தினம், மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பிரச்சார பயணத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்..

175 தொகுதிகளில் களம் காணும் ‘உதயசூரியன்’:

அதோடு, திமுக கூட்டணிக்கு ஏற்கனவே ஆதரவை தெரிவித்திருந்த முத்தரையர் சமூகத்தை சேர்ந்த கே.கே.செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சிக்கு ஒரு தொகுதி நேற்று ஒதுக்கப்பட்டது. குறிப்பாக இந்த 4 கட்சிகளும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டி என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தமாக, கூட்டணி கட்சிகளுக்கு 70 இடங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திமுக 164 இடங்களில் மட்டுமே போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மதிமுக 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் 175 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காண்கிறது.

எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?

ஏற்கனவே தொகுதி பங்கீடு முடிவடைந்த கட்சிகளிடம் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை திமுக குழு பெற்றிருந்தது. அதனடிப்படையில் எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக குழு முதலில் ஆலோசனை மேற்கொண்டது. அதன்பின்னர், கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு குழுவினரை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று முன்தினம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

2 கட்டங்களாக பேச்சுவார்த்தை:

தொடர்ந்து, 2வது கட்டமாக நேற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தந்த கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியலில் கையெழுத்திட்டனர். திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சந்தித்து பேசினார்.

ஆனால் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இறுதியாகவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் இறுதி செய்யப்படவில்லை. இந்த கட்சிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிக்க உள்ளார்.

இதையும் படிக்க : “கணினி மயமான உலகிலும் பழைமை மாறவில்லை”.. கட்சி கொடிகள் – சின்னங்கள் பொறித்த பொருள்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

இன்று திமுக வேட்பாளர்கள் பட்டியல்?

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் 27ம் தேதி (அதாவது, இன்று) வெளியிடப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதே போன்று மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று வைகோவும் அறிவித்துள்ளார். தொடர்ந்து, திமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us