பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள்.. மருத்துவமனையில் அனுமதி!!
இந்த தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.வேலு பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதோடு, மருத்துவர்களிடமும் குழந்தைகளின் நலன் குறித்து கேட்டறிந்தார். 11 மாணவர்கள் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கம் அடைந்த சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி அயோத்தியாபட்டணம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் ஒன்றாம் வகுப்பு முதல 8. ஆம் வகுப்பு வரை 58 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை சிற்றுண்டி உணவு உட்கொண்ட 11 மாணவர்களுக்கு சில நிமிடத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்கள் சாப்பிட்ட உணவை பரிசோதனை செய்து பார்த்ததில் பல்லி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மயக்கமடைந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்த ஜெகன் தனது கார் மூலம் மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.வேலு பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதோடு, மருத்துவர்களிடமும் குழந்தைகளின் நலன் குறித்து கேட்டறிந்தார். 11 மாணவர்கள் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கம் அடைந்த சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
