நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிய சிறுத்தை.. நீலகிரியில் பரபரப்பு சம்பவம்!
Old Woman Attacked By Cheetah | நீலகிரியின் தலையாட்டுமந்து என்ற பகுதியில் நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை வேட்டையாட முயற்சி செய்த நிலையில், அது முடியாமல் போனதால் கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டியை தாக்கியுள்ளது.
நீலகிரி, ஜூன் 08 : நீலகிரி (Nilgiris) பகுதியில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டியை சிறுத்தை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியின் வீட்டின் வெளியே கட்டி வைக்கப்பட்டு இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாட வந்த சிறுத்தை அது முடியாமல் போன நிலையில், மூதாட்டியை தாக்கியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நல்லிரவில் வீடு புகுந்து சிறுத்தை, மூதாட்டியை தாக்கிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிய சிறுத்தை
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரை ஓட்டிய, தொட்ட பெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த பகுதிகள் வனப்பகுதிக்கு மிக அருகில் உள்ளதன் காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை வழக்காமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் தான், நேற்று முன் தினம் ஊட்டியின் கீழ் தலையாட்டுமந்து என்ற பகுதியில் இரவு நேரத்தில் விசாலட்சி என்ற 75 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் சிறுத்தை புகுந்துள்ளது.
இதையும் படிங்க : நாளை மறுநாள் சிங்கப்பெண் திட்டம் துவக்கம்? வெளியான தகவல்
வளர்ப்பு நாயை வேட்டையாட வந்த சிறுத்தை மூதாட்டியை தாக்கியது
மூதாட்டியின் வீட்டு வாசலில் வளர்ப்பு நாய் ஒன்று கட்டி போடப்பட்டு இருந்த நிலையில், அதனை வேட்டையாடுவதற்காக அந்த சிறுத்தை அங்கு சென்றுள்ளது. ஆனால், வளர்ப்பு நாய் தப்பியுள்ளது. இதனால், அந்த சிறுத்தை கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டியை தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியின் வீட்டில் சிறுத்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஆன்லைன் பத்திரப் பதிவு – புதிய நடைமுறையை அறிவித்த தமிழக அரசு
இந்த நிலையில், மூதாட்டியை பத்திரமாக மீட்ட அக்கம்பக்கத்தினர், சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர். இது குறித்து வனத்துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துரையினர் சிறுத்தையை பிடிக்க கதவை திறந்த நிலையில், சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது.



