AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆன்லைன் பத்திரப் பதிவு – புதிய நடைமுறையை அறிவித்த தமிழக அரசு

ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த மக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணப்பதிவு செய்வதற்கான முறையை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறை மூலம் பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் மூலம் இணைய வழியில் தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆன்லைன் பத்திரப் பதிவு – புதிய நடைமுறையை அறிவித்த தமிழக அரசு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Jun 2026 18:02 PM IST

சென்னை, ஜூன் 7 : பத்திர பதிவுத் துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கல் தொடர்பான அறிவிப்பை தமிழக பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. ஆவணப்பதிவு முறையை எளிமையாக்க பொதுமக்கள் தாங்களாகவே இணையவழியில் ஆவணங்களை பதிவு செய்வதற்கான முறையை பத்திர பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பத்திர பதிவுத்துறை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை குறைக்க இந்த புதியய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு

இது குறித்து தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட அறிக்கையில், ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த மக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணப்பதிவு செய்வதற்கான முறையை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறை மூலம் பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் மூலம் இணைய வழியில் தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

இதையும் படிக்க : திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா?.. ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸின் முக்கிய அறிவிப்பு.. அரசியல் களத்தில் பரபரப்பு!

ஆவணப் பதிவிற்கு சார் பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார் பதிவாளரின் மின்னணு கையெழுத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் லாகின் செய்யவும், மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழிய தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்திரப்பதிவு துறையின் அறிவிப்பு

 

வருகை இல்லா ஆவணப்பதிவு நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்ப்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கீழ்கண்ட நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.

சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யும் ஆவணங்கள்

  • முதல் விற்பனை மனை
  • முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு
  • தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்
  • வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள்

பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள், வங்கிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோ் இதனை பதிவு செய்யலாம்.

இதையும் படிக்க : நீதிமன்ற வளாகத்திலேயே கொலையா? கோவையில் பிணமாகக் கிடந்த வாலிபர் வழக்கில் அதிரடி திருப்பம்!!

ஆவணங்களை எப்படி பதிவு செய்வது?

  • பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்பிக்கலாம்.
  • ஆவணத்தை எழுதி கொடுப்பவர்கள், எழுதி பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதாரை அப்லோட் செய்ய வேண்டும்.
  • ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதாரை சரிபார்க்க வேண்டும்.
  • இதற்கு இணைய இணைப்பு, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி மற்றும் புகைப்படக் கருவி ஆகியவை தேவைப்படும்.
  • ஹார்ட்வேர் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு முகமது யூனுஸ், அருண்குமார் ஆகியோரை 7397574067 மற்றும் 9940446694 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
  • சாஃப்ட்வேர் சம்மந்தமான சந்தேகங்களுக்கு சீனிவாஸ் கணேஷ், டில்லி பாபு ஆகியோரை 6369798973 மற்றும் 8525805957 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Follow Us