திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முந்தைய நடைமுறையே பின்பற்றப்படும் என சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100 சதவிகிதம் அனுமதிக்கமாட்டோம் என்றார்.
மதுரை, ஜூன் 6 : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முந்தைய நடைமுறையே பின்பற்றப்படும் என சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மகல்குமார் ஜூன் 6, 2026 அன்று அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், மதுரை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான தற்காலிக திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
மேலும் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். அங்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சூழல் தொட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அரசின் கொள்கையும் அது தான். எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100 சதவிகிதம் அனுமதிக்கமாட்டோம் என்றார்.
இதையும் படிக்க : அப்போது கலைஞர் இருந்தார், இப்போது உதயநிதியால்…. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்




தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இணைந்து ஆய்வு செய்வார்கள். அரசுக்கு எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வுக்கு பிறகே தெரிய வரும். முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார.
மேலும் பேசிய அவர், மூடப்பட்ட கடைகளில் சட்டவிரோதமாக பார் நடத்தினால் அவர்கள் மீதும் நடவடிக்கை உறுதி. முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை கிடையது. கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள செய்தியாளர்களை சந்தித்து வந்தனர். மக்களுக்கு உரிய காலத்தில் தெளிவுபடுத்தி வருகிறார் என்றார்.
இதையும் படிக்க : விசிக கேட்கும் அந்த தொகுதி.. தவெகவிடம் டீல் பேசும் திருமாவளவன்.. ரகசிய மூவ் என்ன?
தொடர்ந்து பேசிய அவர், ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. என்னென்ன ஃபைல்கள் காணாமல் போயுள்ளன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையும் முழு வீச்சில் விசாரணை நடத்தி வருகிறது தவற செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. ஹார்ட் டிஸ்க் திருடு போன தகவல் வெளியான உடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எங்கிருந்து வந்தார். செந்தில் பாலாஜி ஏன் பதட்டமடைகிறார் என கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தினத்தன்று வழக்கமாக உச்சி பிள்ளையார் கோவில் அருகே மட்டும் தீபம் ஏற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அமைச்சரின் உறுதியான தகவலால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேலும் சர்ச்சை உருவாகியுள்ளது.