AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனிப்பட்ட குற்றங்களுக்கு தமிழக அரசை எப்படி குறை சொல்ல முடியும்? அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி

தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியளர்களை சந்தித்தபோது இது குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதற்கு பதிலளிக்கவில்லை என்றார்.

தனிப்பட்ட குற்றங்களுக்கு தமிழக அரசை எப்படி குறை சொல்ல முடியும்? அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
நிர்மல் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Jun 2026 19:55 PM IST

சென்னை, ஜூன் 2 : தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்தார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்காதது சர்ச்சையானது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியளர்களை சந்தித்தபோது இது குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதற்கு பதிலளிக்கவில்லை என்றார்.

தனிப்பட்ட குற்றங்களுக்காக தமிழக அரசை குறை சொல்வதா?

மேலும் பேசிய அவர்,. திமுகவுடன் இணைந்து யாராவது ஆட்சியமைக்க முயற்சி செய்வார்களா? திமுகவுடன் இணைந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதற்கு எதிராகவே அதிமுகவின் தவெகவில் இணைகின்றனர். அதிமுகவை மொத்தமாக முடித்து பெட்டியை கட்டி பரணில் வைத்து விடுவார் என்றார்.

இதையும் படிக்க : கோவையில் தனியார் தியேட்டரில் திடீர் கலாட்டா.. பொதுமக்களிடம் உரிமையாளர்கள் – ஊழியர்கள் கடும் வாக்குவாதம்!

தொடர்ந்து திருச்சியில் முதல்வர் விஜய் பேசியது குறித்து விளக்கமளித்த அவர், திருச்சியில் முதல்வர் விஜய்யின் உரை எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஏதாவது சொல்லிய படி இருப்பார்கள். டிடிவி தினகரன் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது. அவருடன் சுற்றிய 50 ஆயிரம் பேரை நடுத்தெருவில் விட்டுவிட்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துள்ளார்.

ஒவ்வொரு துறைகளிலும் உள்ள பிரச்னைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. போதைப்பழக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. தனிப்பட்ட குற்றங்களுக்கு தமிழக அரசை எப்படி குறை சொல்ல முடியும்? அனைத்து துறைகளிலும் பிரச்னைகளை சரி செய்ய உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றார்.

மேலும் பேசிய அவர்,  குற்றம் நடந்த பிறகு அதனை அரசு எப்படி நடவடிக்கை எடுக்கிறது என்று தான் பாரக்க வேண்டும். கலவரங்களில் அரசு தவறு செய்தால் அரசின் மீது தவறு சொல்லலாம். தனிப்பட்ட குற்றங்களில் அரசு எப்படி செயல்படுகிறது என பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியை விட காவல்துறை துரிதமாக செயல்படுவதாக எங்களிடம் தெரிவிக்கிறார்கள். சட்ட விரோதமான செயல்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கோவையில் திடீரென மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ் படை.. ஆம்னி பேருந்துகள் சல்லடை சல்லடையாக அலசல்.. என்ன காரணம்!

இந்த நிலையில் டிடிவி தினகரனை நிர்மல்குமார் விமர்சித்திருந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எல்லாக கடசி கரை வேட்டிகளை பையில் வைத்துக் கொண்டு, பதவி கிடைக்கும் இடத்திலேயே வேட்டியை மாற்றிக் கொள்ளும் இவர், அதிர்ஷ்டத்தால் கிடைத்த பதவி மமததையில் ஏதேதோ உளறி இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us