திருப்பரங்குன்றத்தில் பெண்கள், குழந்தைகள் மயக்கம்? – கோவில் நிர்வாகம் விளக்கம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக 87 பக்தர்கள் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் அந்த தகவல் முற்றிலும் பொய் என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கதது.
மதுரை, மே 30 : திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாகம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் 87 பக்தர்கள் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. இருவர் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவில் நிர்வாகம் விளக்கம்
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பக்தர்கள் மயக்கமடைந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது எனக் கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. பால்குடம் எடுத்து வந்த விளாங்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற பக்தர் ஒருவர் மட்டுமே மயக்கமடைந்ததாகவும், அவருக்குக் கோயில் மருத்துவ முகாமில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் குணமடைந்து பாதுகாப்பாக வீடு திரும்பினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமான் அவதரித்த திருநாள் என கருதப்படும் வைகாசி விசாகம் அன்று முருக பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்து ஊர்வலமாக சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அன்றைய தினம் முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனால் பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.




இதையும் படிக்க : தமிழ்நாட்டில் திருமணச் சான்றிதழ் பெறுவது எப்படி? விண்ணப்பிக்கும் முறை என்ன?
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாகம் பண்டிகை கடந்த மே 21, 2026 அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் மே 30, 2026 இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவெடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி வந்த நிலையில், முருகன் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் பக்தர்கள் மயில், புஷ்பம், பறவை காவடிகள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர். குறிப்பாக 12 அடி அகலம் கொண்ட வேலால் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர். இது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. வைகாசி விசாக விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிக்க : “புதிய ரேஷன் கார்டு”.. விரைவில் சிறப்பு முகாம்கள்.. அமைச்சர் வெங்கடரமணன் சொன்ன GOOD NEWS!!
இந்த நிலையில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். கொளுத்தும் வெயிலில் நீண்ட நேம் வரிசையில் காத்திருக்க நேர்ந்ததாக கூறப்படுகிறதது. போதிய குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய வில்லை என பக்தர்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்தனர்.