Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய மதுரை கலெக்டர் – என்ன நடந்தது?

Thiruparankundram Contempt Case : மதுரை திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றக்கோரி நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் ஆஜரான மதுரை கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்… நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய மதுரை கலெக்டர் – என்ன நடந்தது?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Feb 2026 16:52 PM IST

மதுரை, பிப்ரவரி 2: திருப்பரங்குன்றம் (Thiruparankundram) மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை என குற்றம்சாட்டப்பட்டு தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நலையில் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் மத ரீதியான பதற்றம் உருவாகும் எனக்கூறி அப்பகுதியில் தீபமேற்ற அனுமதி வழங்கவில்லை. மேலும் அந்த பகுதியில் 144 உத்தரவு போடப்பட்டது.

நிபந்தனையற்ற மன்னிப்புகோரிய மதுரை கலெக்டர்

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருக்கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பிப்ரவரி 2, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், மலையேற அனுமதிக்க முடியாது. வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள தயார் என காவல்துறையினர் கூறினரா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகக புன்னகையுடன் அதிகாரிகள் வந்துள்ளனர் என்று கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று இங்கு மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 6 நாட்கள் மழை நிலவரம்.. வானிலை ரிப்போர்ட்..

இதனையடுத்து விசாரணையின்போது மதுரை மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை. மத ரீதியான மோதல் ஏற்படும் சூழல் இருந்ததால் மட்டுமே 144 அமல்படுத்தப்பட்டது. நீதிமன்றத்தை மதித்து நிபந்தனை இல்லா மன்னிப்பு கோறுகிறேன் என தெரிவத்தார்.

காவல்துறையினர் விளக்கம்

திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரம், ஏற்கனவே மத உணர்வுகள் சார்ந்த பிரச்னையாக இருப்பதால், தீபம் ஏற்றும் இடம் மாற்றப்பட்டால் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிவு 144 அமல்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : அரசு ஊழியர்களை சொந்த பணிக்கு பயன்படுத்த தடை..புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு!

மதுரை கலெக்டர் அளித்த விளக்கம் மற்றும் மன்னிப்பு மனுவை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் பின்னர் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3, கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவவதிப்பு வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.