AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிகிச்சையில் ஹெச்.ராஜா..நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…பாஜக-திமுகவினர் நெகிழ்ச்சி!

CM MK Stalin: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். இதே போல, துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலினும் நலம் விசாரித்தார்.

சிகிச்சையில் ஹெச்.ராஜா..நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…பாஜக-திமுகவினர் நெகிழ்ச்சி!
ஹெச்.ராவிடம் முதல்வர் மு க ஸ்டாலின் நலம் விசாரிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 01 Feb 2026 17:05 PM IST

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஹெச். ராஜாவுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். இந்த நிலையில், சிகிச்சையில் இருந்து வரும் ஹெச். ராஜாவை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 1) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, ஹெச். ராஜாவின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்ததுடன், ஆறுதல் கூறினார். மேலும், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பூரண குணம் அடைய வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திப்பதாக அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

திடீரென மயங்கி விழுந்த ஹெச்.ராஜா

இதே போல, துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஹெச். ராஜாவிடம் நலம் விசாரித்தார். சென்னையில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா பங்கேற்றிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மேடையில் மயங்கி விழுந்தார். இதனால், அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்? வெளியான தகவல்

ஹெச். ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு

இதைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஹெச். ராஜாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராஜா

இதனால், அவர் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும், பயப்பட கூடிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் முன்பு இருந்ததை விட தற்போது குணமடைந்து வருகிறார். மேலும், ஹெச். ராஜா அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சகஜமாக பேசி வருகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க: இன்று பிரசாரத்தை தொடங்கும் திமுக.. தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

Follow Us