AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆம்னி பேருந்து – கார் மோதி கோர விபத்து.. 3 கல்லூரி மாணவர்கள் பலி..

Omni bus and a car collided: பேருந்து மீது மோதியதில் கார் சுக்குநூறாக நொருங்கியது. அதில், பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தொடர்ந்து, அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவினர்.

ஆம்னி பேருந்து – கார் மோதி கோர விபத்து.. 3 கல்லூரி மாணவர்கள் பலி..
கோர விபத்து
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 01 Feb 2026 11:37 AM IST

கடலூர், பிப்ரவரி 01: கடலூர் அருகே எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் பேர் படுகாயமடைந்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர் திசையில் வந்த பேருந்து மீது மோதியதால் பெரும் விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த 3 மாணவர்கள் உடல்நசுங்கி பலியாகினர். அதோடு, காரில் இருந்த மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையும் படிக்க : மத்திய அரசின் அறிக்கையையே பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

கல்லூரி மாணவர்கள் சென்ற கார்:

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 6 பேர் காரில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திட்டக்குடி அருகே உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் பயின்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்த 6 கல்லூரி மாணவர்களும் காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் வந்தபோது, திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதில் தாறுமாறாக ஓடிய கார் திடீரென சாலையில் தடுப்பின் மீது ஏறி மறுபக்கம் சென்றதாக தெரிகிறது.

அப்பளம் போல் நொருங்கிய கார்:

இதில் எதிர்திசை சாலையில் மேல்மருவத்தூரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது, கட்டுபாட்டை இழந்த இந்த கார் கண் இமைக்கும் நொடியில் வேகமாக சென்று மோதியது. இதில், அந்த கார் அப்பளம் போல் நொருங்கியது. பேருந்தின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து, விபத்து காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் கதறினர்.

காரில் சிக்கிய இளைஞர்கள்:

அதேசமயம், பேருந்து மீது மோதியதில் கார் சுக்குநூறாக நொருங்கியது. அதில், பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தொடர்ந்து, அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவினர். இதில், காரில் இருந்தவர்களை மீட்பதில் கடும் சவால் ஏற்பட்டது. கார் நொருங்கியதால், கை, கால்கள் சிக்கிய நிலையில் உயிருடன் இருந்தவர்கள் அலறினர்.

இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!

3 பேர் மருத்துவமனையில் அனுமதி:

தொடர்ந்து, போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

Follow Us