Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!

TVK State Legal Protection Committee: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசார மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த குழுவில் மாவட்டம் வாரியாக 35 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!
தவெக தேர்தல் பிரசார மாநில சட்ட பாதுகாப்பு குழு அமைப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 31 Jan 2026 13:31 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் தமிழக வெற்றி கழகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தேர்தல் பிரச்சார மாநில சட்ட பாதுகாப்பு குழுவை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சார மாநில சட்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், சிடிஆர். நிர்மல் குமார், பி. வெங்கட்ரமணன், எஸ். அறிவழகன் (மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு), எஸ். குமரேசன் (மாநில ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு), கே. சிவசண்முகம் ( மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு), பி. பாண்டி (எ) கே. பி. பாண்டியன் ( மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு), ஆர். எஸ். இந்திரா தன்ராஜ் ( மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில வழக்கறிஞர் பிரிவில்…

இதே போல, ஆர். சக்கரவர்த்தி ( மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு), ஆர். செல்வ பாரதி ( மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு), எஸ். ஏ. வெலிங்டன் ( மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு), எம். தன்ராஜ் ( மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு), ஜெ. விஜயகுமார் ( மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு), ரேவந்த் சரண் ( சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: பாமகவுக்கு வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல்…கெளரவத் தலைவர் ஜி.கே.மணி!

மாவட்டம் வாரியாக கட்சியினர் நியமனம்

மேலும், எம். சத்திய குமார் ( தேசிய செய்தி தொடர்பாளர்), ஜே. லெனின் ( சென்னை), வி. சி. சங்கரநாராயணன் ( மதுரை), டி. ராஜரத்தினம் ( சென்னை), கே. . உதயகுமார் ( சென்னை), ஆர். சுரேஷ் பாபு ( திருப்பத்தூர்), பி. அன்பரசன் ( திருவாரூர்), டி. அஜித்குமார், கே. மகேந்திரன் (செங்கல்பட்டு), வி. இளமாறன் (நாகப்பட்டிணம்), வி. முத்துக்குமரன் ( தஞ்சாவூர்), ஆர். வெற்றிச்செல்வன் ( திருவள்ளூர்), பி. கோகிலா ராணி ( திருச்சி), ஆர். லூயிசாள் ரமேஷ் ( திருப்பத்தூர்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவுக்கு கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

தலித் டைகர் சி. பொன்னுசாமி ( திருவண்ணாமலை), தங்க கொளஞ்சிநாதன் ( கடலூர்), எம். தியாகராஜன் ( சோழவந்தான்), கே. முனியப்பன் ( விழுப்புரம்), பி. தனசேகரன் ( மதுரை), டி. நரேந்திரகுமார் ( காஞ்சிபுரம்), எஸ். சுகுமார் ( திருவண்ணாமலை) ஆகியோர் எனது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “ரோடுஷோ வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற முடியாதவை”.. வழக்கு தொடர்ந்த தவெக