AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பங்குனி அமாவாசை 2026: கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் என்னென்ன?

Panguni Amavasya 2026: பங்குனி அமாவாசை முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசிகளை பெற சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தர்ப்பணம், தானம், அன்னதானம் செய்வதால் பித்ரு தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது. சூரிய வழிபாடு, தீபம் ஏற்றுதல் போன்ற வழிபாடுகள் ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

பங்குனி அமாவாசை 2026:  கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் என்னென்ன?
பங்குனி அமாவாசை Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Mar 2026 15:11 PM IST

மகாளய அமாவாசை அன்று ஏதாவது ஒரு விருந்தினர் அல்லது ஏழைகளின் வடிவில் பித்ருக்கள் உங்கள் வீட்டிற்கு வரலாம் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. அவர்கள் உதவி கேட்கலாம் என்பதால், அப்படி வருபவர்களை அவமதிக்காமல், மனம் நொந்துபோகும் வகையில் நடக்காமல், வெறும் கையுடன் திருப்பி அனுப்பாமல் இருப்பது மிகவும் அவசியம். இது உங்கள் முன்னோர்கள் உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு உணவளித்து, முன்னோர்களை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டு, அவர்களின் ஆசிகளை பெறுவது முக்கியமான ஆன்மீக செயல் என கருதப்படுகிறது.

பங்குனி அமாவாசையின் ஆன்மீக சிறப்பு

பங்குனி மாதத்தில் வரும் அமாவாசையை வடமொழியில் சைத்ர அமாவாசை என்றும், பூதாதி அமாவாசை என்றும் அழைப்பதுண்டு. பஞ்சாங்கத்தின் படி இந்து நாட்காட்டியில் வரும் கடைசி அமாவாசையாக இது கருதப்படுகிறது. பொதுவாக அமாவாசை நாள் முன்னோர்களை வழிபடுவதற்கும், அவர்களின் ஆசிகளை பெறுவதற்கும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நாளில் சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் வழிபடுவது சிறப்பான பலனை தரும் என நம்பப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி அமாவாசை மார்ச் 18ஆம் தேதி புதன்கிழமையன்று வருகிறது.

அமாவாசை திதி நேர விவரங்கள்

பங்குனி அமாவாசை 2026ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி காலை 08.29 மணிக்கு துவங்கி, மார்ச் 19ஆம் தேதி காலை 07.29 மணி வரை நீடிக்கிறது. இந்த காலப்பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக திதி நேரத்தை சரியாக பின்பற்றுவது ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பங்குனி அமாவாசையின் பலன்கள்

இந்த நாளில் புனித நீராடுவது பாவங்களை நீக்கும் என நம்பப்படுகிறது. முன்னோர்களின் ஆசிகளுடன் இறையருளையும் சேர்த்து பெறுவதற்கான சிறந்த நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் தர்ப்பணம் முன்னோர்களுக்கு முக்தி மற்றும் ஆத்ம சாந்தி அளிக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் சூரிய வழிபாடு செய்வதால் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகள் நீங்கும் என நம்பிக்கை நிலவுகிறது. பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் நீங்குவதற்கும் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் உதவுகின்றன.

செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்

பங்குனி அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசிகளை பெற விரதம் இருப்பது நல்லதாக கருதப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன் புனித நீராடி, அமாவாசை திதி தொடங்கிய பின் சூரியனை சாட்சியாக வைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். சூரியனுக்கு நீர் சமர்ப்பித்து வழிபடுவது முக்கியமான முறையாகும். மேலும் முன்னோர்களின் பெயரில் தானம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும் என நம்பப்படுகிறது.

தானம் மற்றும் அன்னதானத்தின் அவசியம்

தர்ப்பணம் செய்த பின் ஏழைகள், வயதானவர்கள் அல்லது தேவையுள்ளவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. இது முன்னோர்களின் திருப்திக்காக செய்யப்படும் முக்கிய செயல் என பார்க்கப்படுகிறது. இத்தகைய தானங்கள் பித்ரு தோஷத்தை குறைக்கும் என ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன.

மற்ற பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்

காகங்களுக்கு உணவிடுவது, பூனைக்கு பால் கொடுப்பது, பசுமாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த பச்சரிசி கொடுப்பது ஆகியவை தர்ப்பணம் செய்ததற்கு இணையான பலனை தரும் என நம்பப்படுகிறது. மாலை நேரத்தில் அரசமரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் சனி பகவானுக்கு கருப்பு எள் மற்றும் நீல மலர் படைத்து வழிபடுவது சிறப்பு. அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்வதும் மிகுந்த ஆன்மீக பலனை அளிக்கும்.

Follow Us