AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக தலைவர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பு…எப்போது தெரியுமா..அருண் ராஜ் கூறிய பதில்!

Tvk Secretary Arun Raj: தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் எப்போது செய்தியாளர்களை உண்மையாக சந்திக்கிறாரோ, அப்போது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார் என்று கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பு…எப்போது தெரியுமா..அருண் ராஜ் கூறிய பதில்!
விஜய் எப்போது செய்தியாளர்களை சந்திப்பார்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 01 Feb 2026 19:21 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 1) நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை தொடர்ந்து, கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது வெறும் கண் துடைப்பாக மட்டுமல்லால் மக்கள் குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சியாக இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி திமுக என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற பணிகளை நாங்கள் தெளிவாக செய்து வருகிறோம். திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை முன்னிறுத்தி, அதை மக்களிடம் எடுத்துக் கூறி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றப் போகிறோம்.

கூட்டணி நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம்

தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் குழுவை கட்சியின் தலைவர் விஜய் நேரடியாக கண்காணித்து வருகிறார். மக்களிடம் கேட்கப்பட்ட குறைகளை எப்படி நிவர்த்தி செய்கிறோம் என்பதை எங்களது ஆட்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையையும், விஜயையும் முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது கூட்டணிக்காக அல்ல. அது எங்கள் கொள்கை முடிவு ஆகும்.

மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.3 ஆயிரம் ரொக்கம்..பெற விரும்பாத 6 லட்சம் பேர்..என்ன காரணம்!

ஆட்சி மாற்றத்துக்காக மக்கள் ஏக்கம்

தமிழக வெற்றி கழகத்தில் ஊழல் செய்ய மாட்டேன் என்றும் ஊழல் செய்ய விட மாட்டேன் என்றும் கட்சியின் தலைவர் விஜய் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்க உள்ளது. பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுகவுக்கு மக்கள் மாறி மாறி வாக்குகள் செலுத்தி வந்த நிலையில், வேறு தலைவர் வரமாட்டாரா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர்.

தவெக தலைவர் விஜய் பத்திரிகையாளர் சந்திப்பு

இதனால், வருகிற சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரு ஜனநாயக புரட்சியை ஏற்படுத்தும். தமிழக வெற்றி கழகத்துடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் பலம் கிடைக்கும் என்று விஜயின் தந்தை கூறியது அவரது சொந்த கருத்தாகும். தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி விவகாரத்தை பொதுவெளியில் பேசக்கூடாது. தலைவர் விஜயின் தலைமையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணியை விஜய் அறிவிப்பார். முதல்வர் மு. க. ஸ்டாலின் எப்போது உண்மையான பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துகிறாரோ, அதற்கு மறுநாள் விஜய் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்?…புயலை கிளப்பிய மல்லை சத்யா!

Follow Us