AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்?…புயலை கிளப்பிய மல்லை சத்யா!

DVK Leader Mallai Sathya: வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்வதில் சந்தேகம் உள்ளதாக திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா தெரிவித்தார். திவெக தேர்தல் அறிவிப்பை 28-ஆம் தேதி அறிவிக்க உள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்?…புயலை கிளப்பிய மல்லை சத்யா!
திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 01 Feb 2026 18:35 PM IST

திருப்பூரில் திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த நவம்பர் 20- ஆம் தேதி சென்னையில் திராவிட வெற்றி கழகம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழக முழுவதும் திராவிட வெற்றி கழகத்துக்கான மாவட்ட நிர்வாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் ஒவ்வொரு நாளும் திராவிட வெற்றி கழகத்தின் அரசியல் அடியை எடுத்து வைத்து வருகிறோம். திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தற்போது வரை தொடங்கவில்லை. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அவர்கள் திராவிட வெற்றி கழகத்தை அழைக்கும் பட்சத்தில், திராவிட வெற்றி கழகம் நிச்சயமாக அரசியல் களத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும். ஒரு இயக்கம் அரசியல் களத்தில் இருந்து விலகி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தொடர்ந்து களத்தில் இருக்கிறோம்.

திராவிட வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம்

சட்டமன்ற தேர்தலுக்காக வருகிற பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னையில் திராவிட வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. திமுகவில் இருந்து உருவான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அந்த கூட்டணியில் இணைந்துள்ள போது, அது தொடர்பான பெரிய கருத்துக்கள் இருப்பதாக நாங்கள் அறியவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக இருப்பதாக கூறும் நிலையில், இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் படிக்க: சிகிச்சையில் ஹெச்.ராஜா..நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…பாஜக-திமுகவினர் நெகிழ்ச்சி!

திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்

கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் 22 இடங்கள் மதிமுகவுக்கு என்று பேசி முடிக்கப்பட்ட நிலையில், மறுநாள் காலை கூட்டணி இல்லை என்று வைகோ அறிவித்து விட்டார். இதே போல, கடந்த 2006 ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு செல்வதாக நாங்கள் புறப்பட்டு சென்றோம். ஆனால், நாங்கள் புறப்பட்ட வாகனம் நேராக போயஸ் கார்டன் தான் சென்றது. இதனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் எண்ணம் கேள்விக்குறியாக உள்ளது.

தவெகவினர் அரசியல்படுத்தப்பட வேண்டும்

தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு பட்ஜெட்டை அறிவித்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பின்னால் இளைஞர் பட்டாளம் உள்ளது. அவர்கள் தற்போது வரை ரசிகர்களாகவே உள்ளனர். அவர்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும். ஜனநாயகம் படத்துக்கு தடை விதிப்பது சர்வாதிகார போக்காகும். திரைப்படத்தின் மூலம் அரசியல் நெருக்கடியை கொடுக்கக் கூடாது. இந்தியாவில் அதிக எம்பிக்களை வைத்துள்ள திமுகவின் ஆதரவு காங்கிரஸ் கட்சி மற்றும் இண்டியா கூட்டணி தேவைப்படும் என்று மல்லை சத்யா தெரிவித்தார்.

மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.3 ஆயிரம் ரொக்கம்..பெற விரும்பாத 6 லட்சம் பேர்..என்ன காரணம்!

Follow Us