Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த கணவன்.. பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டர் அழுத்தியதால் தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்!

Car Plunged Into Temple Pond | காரைக்குடியில் கண்ணன் என்பவர் தனது மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நிலையில், கார் கோயிலின் தெப்பக்குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த கணவன்.. பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டர் அழுத்தியதால் தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்!
விபத்துக்குள்ளான கார்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Feb 2026 09:56 AM IST

காரைக்குடி, பிப்ரவரி 01 : சிவகங்கை (Sivagangai) மாவட்டம், காரைக்குடி (Karaikudi) அருகே உள்ள கல்லல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது பிள்ளைகளை நேற்று (ஜனவரி 31, 2026) காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களை பள்ளியில் இறக்கி விட்ட கண்ணன் தனது மனைவியுடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி தனக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்கும்படி கண்ணனிடம் கேட்டுள்ளார். இந்த நிலையில், மனைவியின் ஆசைப்படி கல்லக் தெப்பக்குளம் பகுதியில் அவர் தனது மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்துள்ளார்.

பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய மனைவி

கண்ணனின் உதவியுடன் கார் ஓட்டி பழகிக்கொண்டு இருந்த அவரது மனைவி, பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை வேகமாக மிதித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்து கோயில் தெப்பக்குளத்தின் படித்துறை வழியாக தண்ணீரில் இறங்கியுள்ளது. தெப்பக்குளத்தில் அதிக அளவு தண்ணீர் இருந்த நிலையில், கார் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : ஒரே நாளில் ஐந்து நிறங்களில் மாறும் சிவலிங்கம் – தமிழ்நாட்டின் களியாணசுந்தரேஸ்வரர் கோவிலின் அதிசயம்

தெப்பக்குளத்தில் விழுந்து மூழ்கிய கார்

கார் தெப்பக்குளத்தில் விழுந்து மெல்ல் மெல்ல மூழ்கியதை கண்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அந்த காரில் கணவன் மனைவி இருப்பதை கண்ட பொதுமக்கள், அவர்களுக்கு உதவ முயற்சி செய்துள்ளனர். இந்த நிலையில், கார் மூழ்க தொடங்கியதை உணர்ந்த கணவன், மனைவி உடனடியாக காரின் கதவை திறந்து வெளியே வந்துள்ளனர். இதனால் அவர்கள் எந்த வித பாதிப்பும் இன்று பாதுகாப்பாக உயிர் பிழைத்துள்ளனர்.

இதையும் பாடிங்க : இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – மேலும் ஒருவர் கைது – பரபரப்பு தகவல்

கதவை திறந்து தம்பதி வெளியேறிய நிலையில், கார் தெப்பக்குளத்தின் மையப்பகுதிக்கு சென்று மூழ்கியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் காரை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். கணவன், மனைவிக்கு கார் கற்றுக்கொடுத்தபோது கட்டுப்பாட்டை இழந்து தெப்பக்குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.