Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – மேலும் ஒருவர் கைது – பரபரப்பு தகவல்

Nandanam Government College Case : சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மேலும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்துள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் கேண்டீன் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – மேலும் ஒருவர் கைது – பரபரப்பு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Jan 2026 17:08 PM IST

சென்னை, ஜனவரி 31 : சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மேலும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்துள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் கேண்டீன் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காவதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது நண்பரின் உதவியுடன் நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேண்டீனில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கேண்டீன் உரிமையாளர் முத்து செல்வம், அவரது நண்பர் கார்த்திகேயன் மற்றும் சமையல் மாஸ்டர் குணசேகரன் ஆகியோர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், கல்லூரியின் காவலாளியிடம் புகார் அளித்துள்ளார். பின்னர், காவலாளியின் உதவியுடன் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : “ரோடுஷோ வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற முடியாதவை”.. வழக்கு தொடர்ந்த தவெக

இதனையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், கேண்டீன் உரிமையாளர் முத்து செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட முத்து செல்வம் திமுகவைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஒருவர் கைது

இந்த வழக்கு தொடர்பாக, கேண்டீனில் பணியாற்றிய பாக்யராஜ் என்பவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்றான நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இத்தகைய சம்பவம் நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் மாலை 6 மணிக்கு மேல் கல்லூரி வளாகத்திற்குள் யாரும் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க : பாமகவுக்கு வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல்…கெளரவத் தலைவர் ஜி.கே.மணி!

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவ சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது