திருப்பூரில் 17 வயது சிறுமி கர்ப்பம்… தந்தையும் காதலனும் போக்சோவில் கைது – பரபரப்பு சம்பவம்
Shocking Incident at Tiruppur : திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி கர்ப்பமான நிலையில், பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலனும், தந்தையும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை சிறுமியை போதையில் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
திருப்பூர், நவம்பர் 6: திருப்பூரில் (Tiruppur) அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சிறுமி கர்ப்பமான (pregnancy) நிலையில், அவளது தந்தையும் காதலனும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி, சேலத்தைச் சேர்ந்த 22 வயதான இளவரசன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இளவரசன் தற்போது திருப்பூரில் பனியன் கம்பெனியில் பிரிண்டிங் தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுக்கு முன் இளவரசனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அவரை உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக கே.வி.ஆர். நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க : சென்னையில் ரூ.2.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட பெண் குழந்தை.. 6 பேர் அதிரடி கைது!




மகளிடம் அத்துமீறிய தந்தை
விசாரணையில், இளவரசன் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் சிறுமி கர்ப்பமானதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இளவரசனை இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போக்சோவில் காதலனும் தந்தையும் கைது
சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்திருக்கிறார். அந்த சிறுமியின் 47 வயதான தந்தை, மது அருந்திய நிலையில் தன் மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்தது எனவும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தந்தையும் காதலரும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே, தன் மகளை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : வேகமாக சென்ற கார் கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி.. விபத்து குறித்து வெளியான திடுக் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலும் இது போன்ற குற்றங்கள், குழந்தைகளின் நெருங்கிய உறவினர்களாலேயே நடைபெறுவது பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் 30, 2025 அன்று திருச்சி அருகே 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டிருந்தார். குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய தந்தையே இப்படி குற்றச்செயல்களில் ஈடுபடுவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.