வேகமாக சென்ற கார் கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி.. விபத்து குறித்து வெளியான திடுக் தகவல்!
Speeding car overturns: ஒட்டன்சத்திரம் அருகை நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார், அந்த சாலை முடிந்து இருவழிப் பாதையாக சாலை மாறும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து, கான்கிரிட் கல் மீது மோதி கவிழ்ந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
திண்டுக்கல், நவம்பர் 05: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் நர்சிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக்கு மாணவி சென்ற கார் அதிவேகமாக சென்றதே காரணம் என்று கூறப்பட்டது. அதோடு, மாணவியை அழைத்துச் சென்ற ஆண் நண்பருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. அண்மைக் காலமாக சொகுசு கார்களில் வேகமாக சென்று இளைஞர்கள் விபத்து ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. வேகமே ஆபத்து என்ற நிலையில், அதனை விட கொடுமையாக, அதீத போதையில் கார் ஓட்டும் போக்கும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் கல்லூரி மாணவி விபத்து குறித்த விசாரணையில், வேகத்துடன், மற்றொரு காரணமும் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி புவனேஸ்வரி. இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரி செல்ல கிளிம்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்து புறப்பட தாமதமானதால், தனது ஆண் நண்பர் நந்தக்குமாரை தொடர்பு கொண்டு காரில் கல்லூரியில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளார். நந்தக்குமாரும் உடனடியாக புவனேஸ்வரியை அவரது குடியிருப்புக்கு அருகே வந்து தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து, புவனேஸ்வரி கல்லூரிக்கு நேரமாகிவிட்டதாக பதற்றப்படவே, நந்தக்குமார் காரை வேகமாக இயக்கியதாக தெரிகிறது.




தலைக்குப்புற கவிழ்ந்த கார்:
அப்போது, வேகமாக சென்ற கார் ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலை முடிந்து இருவழிப் பாதையாக சாலை மாறும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது புறத்தில் இருந்த சிறிய கான்கிரீட் கல் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில். நந்தகோயால் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்நிலையில், விபத்திற்கு காரின் அதிவேகம் ஒரு காரணமாக இருந்த போதும், நான்கு வழிப்பாதை இரு வழிப்பாதையாக திடீரென சுருங்குவதும் அங்கு திடீரென கான்கிரீட் கல் இருந்ததும் விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க : கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..
சாலையில் வேகத்தடைகள் இல்லை:
மேலும் நான்கு வழிச்சாலை முடியும் இடத்திற்கு முன்பே. அதாவது குறிப்பிட்ட தூரத்திற்கு முன்கூட்டியே அதிர்வை ஏற்படுத்தும் வேகத்தடைகள் இல்லாததும், குறிப்பிட்ட தூரத்திற்கு முன் தொடர்ந்து போதுமான எச்சரிக்கை பலகைகள் இல்லாததும் விபத்திற்கும், கல்லூரி மாணவியின் உயிரிழப்பிற்கும் காரணமாகி உள்ளது தெரியவந்துள்ளது.
அதோடு, சாலையின் இடது புறத்தில் சிறிய ரெட் லைட் மட்டுமே போதாது என்ற நிலையில் இதனை உடனடியாக சரி செய்யாவிட்டால் இதுபோன்ற விபத்துகள், குறிப்பாக இரவு நேரத்தில் ஏற்படும் நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.