Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை சம்பவம் : இப்படி ஒரு சம்பவம் யாருக்கும் நேரக்கூடாது – துணை குடியரசுத் தலைவர் கண்டனம்

Coimbatore Incident: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் இது குறித்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை சம்பவம் : இப்படி ஒரு சம்பவம் யாருக்கும் நேரக்கூடாது – துணை குடியரசுத் தலைவர் கண்டனம்
சி.பி.ராதாகிருஷ்ணன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Nov 2025 21:43 PM IST

கோயம்புத்தூர், நவம்பர் 4: கோவை (Coimbatore) கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவலரை அவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை காலில் சுட்டுப்பிடித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம்  குறித்து துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் (C.P.Radhakrishnan) கண்டனம் தெரிவித்துள்ளார்.

துணைக் குடியரசுத் தலைவர் கண்டனம்

கோவையில் பத்திரிகையாளர்களை நவம்பர் 4, 2025 அன்று சந்தித்த அவர் பேசியதாவது, நாட்டில் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது அளவிற்கு கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனைக் கேட்டு மிகவும் வருந்தினேன். இப்படி ஒரு சம்பவம் யாருக்கும் நேரக் கூடாது. குற்றவாளிகள் சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை பெற வேண்டும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும்,” என்றார்.

இதையும் படிக்க : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..

கோவையில் நடந்த கொடூரம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 2, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆண் நண்பருடன் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கே பைக்கில் வந்த 3 பேர், ஆண் நண்பரை தாக்கி விட்டு, கல்லூரி மாணவியை அங்கிருந்து தூக்கி சென்றிருக்கின்றனர்.

பின்னர் ஆள் நடமட்டம் இல்லாத பகுதியில் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் காயமடைந்த ஆண் நண்பர், கோவை பீளமேடு காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சைகளுடன் மன நல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கொண்டனர். விசாரணையில் குற்றவாளிகள் கருப்பசாமி, அவரது தம்பி கார்த்திக் என்கிற காளீஸ்வரன் மற்றும் அவரது உறவினரான குணா என்பது தெரிய வந்திருக்கிறது. மூவரும் கொலை வழக்கில் சிறையில் இருந்த நிலையில் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தது தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில் மூவரும் கோவை இருகூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோது காவல்துறையினரை அரிவாளால் தாக்க முயன்றிருக்கின்றனர். இதனையடுத்து அவர்களை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கின்றனர். இதில் காவல் அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்திருக்கிறார். தற்போது மூன்று பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.