Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vice President CP Radhakrishnan: எனது பாதுகாப்பில் குறைபாடா..? குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம்

CP Radhakrishnan about Security: கோயம்புத்தூரில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் குளறுபடி என பாஜக தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. முன்னதாக, கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு போடப்பட்ட இடத்தில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் அத்துமீறினர். அதாவது, பாதுகாப்பு வளையம் மிகுந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை பிடித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

Vice President CP Radhakrishnan: எனது பாதுகாப்பில் குறைபாடா..? குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம்
குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Oct 2025 17:59 PM IST

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் (Vice President CP Radhakrishnan)
இன்று அதாவது 2025 அக்டோபர் 28ம் தேதி முதல் 2025 அக்டோபர் 30ம் தேதி வரை 3 நாள் தமிழ்நாடு பயணமாக வந்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு துணை தலைவராக பதவியேற்ற பிறகு, சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கோவை விமானநிலையத்தில் (Kovai Airport) குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் 2025 அக்டோபர் 28ம் தேதியான இன்று காலை 10 மணிக்கு வந்திறங்கியபோது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் நேரில் வந்து வரவேற்றனர்.

எனது பாதுகாப்பில் குறைபாடா..? சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம்


கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “எனது அரசியல் என்னும் பொதுவாழ்க்கையை கோயம்புத்தூரில் இருந்துதான் தொடங்கினேன். இதை கூறுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்தியா உயர்ந்தால்தான் நாம் வளர முடியும். விவசாயம், தொழில்முறை என இரண்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. ஒரே நேரத்தில் 3 மாநிலங்களுக்கு ஆளுநராக பணியாற்றியேன். தற்போது, துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்று உள்ளேன்.

ALSO READ: நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை

என்னை பொறுத்தவரை முயற்சி நம்முடையது, முடிவானது இறைவனுடையது. இந்த துணை குடியரசு தலைவர் என்பது எனக்கு கிடைத்த ஒரு மகத்தான மரியாதையாக நாம் பார்க்கவில்லை. துணை குடியரசு தலைவர் பதவி எனக்கு கிடைத்த தனிப்பட்ட மரியாதை மட்டும் அல்ல, உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும், நம் கொங்கு மண்ணிற்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன். கோயம்புத்தூர் விமான நிலையத்தின் வளர்ச்சிக்காக உதவுவேன்” என்றார்.

ALSO READ: 2026 தேர்தலில் பாஜக கனவு பலிக்காது.. மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!

குறைபாடு இல்லை..

கோயம்புத்தூரில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் குளறுபடி என பாஜக தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. முன்னதாக, கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு போடப்பட்ட இடத்தில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் அத்துமீறினர். அதாவது, பாதுகாப்பு வளையம் மிகுந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை பிடித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்தும் பேசிய குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், “எனது பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. கோவை மக்கள்தான் எனது பாதுகாப்பு” என்று தெரிவித்தார்.