Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வர வேண்டாம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை..

Annamalai: ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஓய்வூதியத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், நிதி பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வர வேண்டாம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை..
அண்ணாமலை
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Oct 2025 18:40 PM IST

அக்டோபர் 19, 2025: தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த கேள்விகளை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது, இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023-24 ஆம் ஆண்டு CAG அறிக்கையின் படி, 1540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,088 கோடி நிதி செலவிடப்படாமல் வீணாக்கப்பட்டது – ஏன்?

அண்ணாமலையின் அடுக்கடுக்கான கேள்வி:

2023-24 ஆம் ஆண்டில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி ரூ.1,985 கோடி. இதில் ரூ.507 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகர்மான கழகத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடை மாற்றப்பட்டது – ஏன்?

2021-22 முதல் 2023-24 வரை மத்திய அரசிடம் பெற்ற GST இழப்பீடு தொகையான ரூ.28,024 கோடியில், 10% உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்பது மாநிலத் திட்டக் குழுவின் பரிந்துரை. ஆனால் அவை வழங்கப்படவில்லை – ஏன்?

மேலும் படிக்க: பாதுகாப்பான தீபாவளியே முக்கியம்.. இந்த முன்னெச்சரிக்கைகள் உங்களை காக்கும்!

தேர்தலின் போது திமுக சார்பில் 511 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இவற்றைத் தவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இவற்றில் 10% வாக்குறுதிகளையும் கூட நிறைவேற்றாமல் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எப்படி சந்திக்கிறீர்கள்?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ‘தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம்’ என கூறியிருந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ.5 லட்சம் கோடி புதிதாக கடன் வாங்கப்பட்டது – ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

புதியதாக சிந்திக்க வேண்டும் – அண்ணாமலை:


மேலும், ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஓய்வூதியத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், நிதி பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நீதிமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது 60 ஆண்டுகளாக பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாக சிந்தித்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.