Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை

TVK VIjay : தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை
மு.க.ஸ்டாலின் - விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Oct 2025 13:33 PM IST

கரூர் (Karur) கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சரியாக ஒரு மாதம் கழித்து கடந்த அக்டோபர் 27, 2025 அன்று மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்தித்தார். அப்போது அவர்கள் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்த விஜய் (Vijay), அவர்கள் குடும்பத்தினரின் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை ஏற்பதாக அறிவித்தார். கரூருக்கு செல்லாமல் அவர்களை சென்னைக்கு வரவழைத்து சந்தித்து சர்ச்சையானது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விரைவில் அவர்களை கரூருக்கு வந்து சந்திப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக அரசியல் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்காத விஜய் நீண்ட இடைவேளைக்கு  பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக அரசை கேள்வி எழுப்பிய விஜய்

தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நெற்பயிற்கள் வீணாணது.  அதுகுறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஜய், தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 37 குடும்பங்களுக்கு ஆறுதல் கூறும் விஜய்!

மேலும்,  வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமைபேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில வினாக்கள். வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமைபேசிவரும் திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில வினாக்கள்.டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன?

வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது. எனவே இனியேனும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். அத்தோடு பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : தவெகவின் ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

தவெக தலைவர் விஜய்யின் பதிவு

 

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவரான ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி, விஜய் அளித்த ரூ. 20 லட்சத்தை திருப்பி அனுப்பியதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் பணத்தை திருப்பி அளித்ததாகவும், பணம் வேண்டாம் ஆறுதல் மட்டுமே வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தனக்கு தெரியாமல் தனது உறவினர்களை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்று இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சங்கவி என்ற பெண் கூறினார்.